'பாத்ரூமுக்குள்' அடித்த 'குளிர்' காற்று... 'முகம்' பார்க்கும் 'கண்ணாடி'யை கழற்றியதும்... 'இளம்பெண்'ணிற்கு காத்திருந்த 'ட்விஸ்ட்'... பரபரப்பு 'வீடியோ'!!
முகப்பு > செய்திகள் > உலகம்இளம்பெண் ஒருவர், டிக் டாக்கில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றால், நெட்டிசன்கள் சற்று அதிர்ந்தே போயுள்ளனர். அப்படி என்ன நிகழ்வை அந்த பெண் வீடியோவாக வெளியிட்டார் என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
அமெரிக்காவின் நியூயார்க் பகுதியைச் சேர்ந்தவர் சமந்தா ஹார்ட்ஸோ (Samantha Hartsoe). இவர் தனது குளியறையில் இருந்து குளிர்ந்த காற்று வீசுவதை உணர்ந்து ஆச்சரியமடைந்துள்ளார். சுற்றி ஜன்னல்கள் இல்லாத ஒரு இடத்தில் இருந்து எப்படி காற்று வீசுகிறது என்பதைக் கண்டறியும் முயற்சியிலும் சமந்தா இறங்கியுள்ளார்.
அப்போது, அங்கு மாட்டப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அகற்ற, ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் காத்திருந்தது சமந்தாவுக்கு. அந்த கண்ணாடிக்கு பின்னால் ஆள் நுழையும் அளவுக்கு துவாரம் ஒன்று இருந்த நிலையில், தனது நண்பர்கள் இருவரை வரச் சொல்லி, அவர்கள் உடனிருக்க, அதன் வழியாக உள்ளே நுழைந்திருக்கிறார் சமந்தா.
உள்ளே நுழைந்து சென்று பார்த்ததில், தனியாக ஒரு வீடே இருந்திருக்கிறது. இரண்டு படுக்கையறைகள் மற்றும் இரண்டு குளியலறைகள் கொண்ட வீடு ஒன்று, தனது குளியலறைக்கு பின்னால் மறைந்திருப்பதை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறார் சமந்தா. இது அனைத்திற்கும் மேலாக, யாரோ பயன்படுத்தி விட்டுச் சென்ற தண்ணீர் பாட்டில் மற்றும் குப்பைகளும் அங்கே இருந்துள்ளது.
இதனால், அடிக்கடி அங்கு யாரோ செல்வதற்கான வழிகளும் உள்ளதாக தெரிகிறது. மொத்தமாக, இந்த சம்பவத்தை ஒரு வீடியோவாக பதிவிட்ட சமந்தா, இந்த சம்பவம் குறித்து உரிமையாளரை சந்தித்து விளக்கம் கேட்கப் போகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ நெட்டிசன்களிடையே அதிகம் வைரலான நிலையில், அதில் சிலர் வேடிக்கையான கமெண்ட்டுகளையும் செய்திருந்தனர். 'நியூயார்க்கில் ஒரு வீட்டின் விலைக்கு இரண்டு வீடு கிடப்பது என்பது அதிர்ஷ்டமாகும்' என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், 'இரண்டாவதாக ஒரு வீடும் கிடைத்துள்ளது. இதை யாரிடமும் சொல்லாதே' என தெரிவித்துள்ளார். 'புதிய தண்ணீர் பாட்டில்கள் உள்ளதால், அங்கே யாராவது தங்கி உங்களை கவனித்துக் கொண்டிருக்கலாம். ஜாக்கிரதை' என்றும் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்