'வார்டிலிருந்து மாயமான மருத்துவர்'... 'உடை மாற்றும் அறையின் சுவிட்சை போட்ட செவிலியர்'... உங்கள காணும்ன்னு தேடுனா என்ன காரியம் பண்ணிட்டு இருக்கீங்க!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பணியின்போது திடீரென காணாமல் போன மருத்துவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

'வார்டிலிருந்து மாயமான மருத்துவர்'... 'உடை மாற்றும் அறையின் சுவிட்சை போட்ட செவிலியர்'... உங்கள காணும்ன்னு தேடுனா என்ன காரியம் பண்ணிட்டு இருக்கீங்க!

இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரிலுள்ள, Fairfield மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்தவர் Dr. Raisah Sawati. இளம் மருத்துவரான இவர் பணியின் போது ஒரு நாள் திடீரென மாயமாகியுள்ளார். அப்போது அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பத் தயாராக இருந்தார்.

Newly qualified doctor, who was struck off for sleeping on shift

அந்த நேரம் அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் Raisah Sawatiயின் கையெழுத்து தேவைப்பட்டதால் அந்த நோயாளி காத்துக் கொண்டிருந்தார். இதனால் மருத்துவரைக் காணாததால், ஒலிபெருக்கி மூலம் நான்கு முறை அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் Raisah வராமல் இருந்துள்ளார். இதனால் செவிலியர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 

பின்னர் செவிலியர் ஒருவர் அவரது அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது மருத்துவர் பயன்படுத்தும் ஸ்டெதஸ்கோப் மட்டும் அங்கு இருந்துள்ளது. இதனால் பதற்றமான செவிலியர்கள் மருத்துவர் Raisah Sawatiயை மருத்துவமனையின் மற்ற இடங்களில் தேடிப் பார்த்துள்ளார்கள். ஆனால் எந்த பயனும் இல்லை.

Newly qualified doctor, who was struck off for sleeping on shift

இந்நிலையில் செவிலியர் ஒருவர் உடை மாற்றுவதற்காக உடை மாற்றும் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் Raisah அந்த அறையின் மின்விளக்குகளை அணைத்துவிட்டு ஒரு பெஞ்சில் படுத்து நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நோயாளிகள் காத்துக்கொண்டிருக்கப் பணி நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த Raisahயின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே Raisah இப்படித் தூங்குவது முதல் முறையல்ல என்றும், ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவர் ஒருவருக்கு ஆடிட் வேலைக்கு உதவச் செல்வதாகக் கூறிவிட்டு இருட்டறை ஒன்றில் படுத்துத் தூங்கிவிட்டது தெரியவந்தது.

Newly qualified doctor, who was struck off for sleeping on shift

மேலும், குழந்தை ஒன்றிற்கு மாரடைப்பு ஏற்பட்டபோது தான்தான் அதைக் காப்பாற்றியதாகப் பொய் கூறியது, சுவாசக்கோளாறால் உயிரிழந்த நோயாளி ஒருவரைக் காப்பாற்றத் தவறியது, மற்றும் தனது கல்வித்தகுதி குறித்துப் பொய் கூறியது எனப் பல குற்றங்களை அவர் செய்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவர்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதனிடையே எனக்கு அன்று வயிற்று வலி இருந்ததன் காரணமாகவே தூங்கச் சென்றதாகவும், நான் பணியில் சிறப்பாகச் செயல்படும் மருத்துவர் எனவும் Raisah விளக்கமளித்துள்ளார்.  மேலும் தன் மீதான நடவடிக்கைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்