777 Charlie Trailer

"ஆடு, மாடு ஏப்பம் விட்டா ஓனர் வரி கட்டணும்".. சட்டம் கொண்டுவரும் நாடு.. புதுசா இருக்கே..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகிலேயே முதல்முறையாக ஆடு, மாடுகள் ஏப்பம் விடுவதற்கு அதன் உரிமையாளர்கள் வரி செலுத்த வேண்டும் என அறிவித்திருக்கிறது நியூசிலாந்து நாடு.

"ஆடு, மாடு ஏப்பம் விட்டா ஓனர் வரி கட்டணும்".. சட்டம் கொண்டுவரும் நாடு.. புதுசா இருக்கே..!

புவி வெப்பமயமாதல் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் கால்நடைகள் ஏப்பம் விடும்போது மீத்தேன் வாயுவை வெளிவிடுவதால் புவியின் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் மீத்தேன் ஒரு பசுமை இல்ல வாயு ஆகும். இதனை அடுத்து இதை கட்டுப்படுத்த நியூசிலாந்து நாடு புதிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.

கால்நடைகள்

குட்டி நாடான நியூசிலாந்தில் மக்கள்தொகை 5 மில்லியன் மட்டுமே. ஆனால் இங்கே உள்ள மாடுகளின் எண்ணிக்கை 10 மில்லியன். ஆம். மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு. அதேபோல இங்கே 26 மில்லியன் ஆடுகள் இருக்கின்றன. இதன் காரணமாகவே இப்படி ஒரு சட்டத்தை கொண்டுவர முடிவெடுத்திருக்கிறது நியூசிலாந்து நாடு.

நியூசிலாந்தின் மொத்த மீத்தேன் உமிழ்வில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை இரண்டு விவசாய மூலங்களிலிருந்து வருகின்றன. முதலாவது விலங்கு வயிறுகள் மற்றும் விலங்கு உரம். இதனை கட்டுப்படுத்தவே இந்த வினோத சட்ட முன்வரைவை தயாரித்திருக்கிறது அந்நாடு. இதன் அடிப்படையில், ஒவ்வொரு பண்ணையிலும் வாயு பிரிப்பு கருவிகள் பொருத்தப்பட வேண்டும் எனவும் அவற்றுக்கு அரசே மானியம் அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம்

கடந்த புதன்கிழமை அன்று, நியூசிலாந்து அரசு வெளியிட்ட இந்த திட்டத்தில் தனியார் சுற்றுச்சூழல் நிறுவனமும் அரசுடன் இணைந்து பணியாற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கால்நடை பண்ணைகளை வைத்திருப்போருக்கு 2025 ஆம் ஆண்டு முதல் வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்ணைகளில் வாயு பிரிப்பான் கூடங்கள் அமைக்கப்பட்டு, வாயுக்கள் சேகரிக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய காலநிலை மாற்ற அமைச்சர் ஜேம்ஸ் ஷா," வளிமண்டலத்தில் நாம் வெளியிடும் மீத்தேன் அளவைக் குறைக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் விவசாயத்திற்கான பயனுள்ள உமிழ்வுக்கு விலை நிர்ணயம் செய்வது இந்த திட்டத்தை வெற்றியடைய செய்யும்" என்றார்.

உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த, ஆடு மற்றும் மாடுகள் விடும் ஏப்பத்திற்கு அதன் உரிமையாளர்களுக்கு வரிவிதிக்கப்படும் என நியூசிலாந்து நாடு தெரிவித்திருப்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

COW, SHEEP, BURPS, TAX, மாடுகள், ஆடுகள், ஏப்பம்

மற்ற செய்திகள்