Naane Varuven M Logo Top

1800 வருஷத்துக்கு முன்னாடி உலகத்தையே ஸ்தம்பிக்க வச்ச எரிமலை .. மறுபடியும் எச்சரிக்கை விடுத்த ஆராய்ச்சியாளர்கள்.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நியூசிலாந்து நாட்டில் உள்ள டௌபோ எரிமலை (Taupō volcano) அமைந்திருக்கும் பகுதியை சுற்றி சிறிய அளவிலான தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து நிபுணர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

1800 வருஷத்துக்கு முன்னாடி உலகத்தையே ஸ்தம்பிக்க வச்ச எரிமலை .. மறுபடியும் எச்சரிக்கை விடுத்த ஆராய்ச்சியாளர்கள்.. முழு விபரம்..!

எரிமலை

நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவுகளில் அமைந்துள்ளது இந்த டௌபோ எரிமலை. இது கடைசியாக 1800 வருடங்களுக்கு முன்னர் வெடித்துச் சிதறியது. பூமியில் உள்ள மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றான இது வெடித்தது. உலக அளவில் பல விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 5000 ஆண்டுகால வரலாற்றில் உலகம் சந்தித்த மிகப்பெரிய எரிமலை வெடிப்பு அதுதான் என்கிறார்கள் நிபுணர்கள். இந்த எரிமலை வெடித்த சமயத்தில் வடக்கு தீவு முழுவதும் ஒரு செமீ தடிமனுக்கு சாம்பல் மூடிக்கிடந்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

 New Zealand Taupō volcano geologists raising the alert level

எச்சரிக்கை

இந்நிலையில், இந்த எரிமலையில் மீண்டும் வெடிப்பு ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருக்கின்றனர். இந்த ஆண்டு மே மாதம் முதல் நியூசிலாந்தின் வடக்கு தீவின் மையத்தில் அமைந்துள்ள Taupō ஏரியில் கிட்டத்தட்ட 700 சிறிய நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக ஜியோநெட் என்ற புவியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு அருகே தான் இந்த எரிமலையும் அமைந்திருக்கிறது. இதுவே ஆராய்ச்சியாளர்களின் கவலைக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

இருப்பினும், அவற்றில் பல நிலத்தில் உணர முடியாத அளவுக்கு பலவீனமாக இருந்தபோதிலும், செப்டம்பர் 10 அன்று 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் நிலநடுக்கங்கள் தொடரலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியே இருக்கும் எரிமலைக்குழம்பு மற்றும் வெப்ப நீர் ஆகியவற்றின் இயக்கம் காரணமாக நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த இடத்தை சுற்றிலும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 New Zealand Taupō volcano geologists raising the alert level

27 முறை

வழக்கமாக இந்த எரிமலை வெடிப்பு எச்சரிக்கை அளவுகள் 0 - 5 வரையில் இருக்கும். தற்போது 1 ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவற்றுள் எந்த அளவில் எரிமலை வெடிக்கும் என்பது கணிக்கமுடியாத ஒன்று என்கிறார்கள் நிபுணர்கள். 1800 வருடங்களுக்கு முன்னர் வெடித்துச் சிதறிய இந்த எரிமலை அதற்கு முன்னரும் ஒருமுறை பயங்கரமாக வெடித்திருக்கிறது. 25,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த எரிமலை வெடித்தபோது தான் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அப்பகுதியே தற்போது ஏரியாக உருவெடுத்திருக்கிறது. அதன்பிறகு 27 முறை வெடித்தாலும் அவை அனைத்தும் சிறிய அளவுகளில் நிகழ்ந்திருக்கிறது. இந்நிலையில், மீண்டும் இந்த எரிமலை வெடிக்கலாம் என ஆராச்சியாளர்கள் தெரிவித்திருப்பது உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

SUPERVOLCANO, NEW ZEALAND, TAUPō VOLCANO, நியூசிலாந்து, டௌபோ எரிமலை

மற்ற செய்திகள்