‘அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலி’!.. ‘இந்தியாவில் இருந்து எங்க நாட்டுக்கு வர அனுமதி இல்லை’.. அதிரடியாக அறிவித்த நாடு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது.

‘அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலி’!.. ‘இந்தியாவில் இருந்து எங்க நாட்டுக்கு வர அனுமதி இல்லை’.. அதிரடியாக அறிவித்த நாடு..!

இந்தியாவில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸின் முதல் அலை விட, தற்போதைய 2-வது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் உள்ளது. இதனால் உலகளவில் கொரோனாவினால் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் நீடித்து வருகிறது.

New Zealand stops entry of travellers from India amid Covid-19 surge

கடந்த 5-ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. அதனை தொடர்ந்து நேற்றைய தினம் 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

New Zealand stops entry of travellers from India amid Covid-19 surge

இந்நிலையில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்தியாவில் இருக்கும் தங்கள் நாட்டு சொந்த குடிமக்களும் நியூசிலாந்து வர தற்காலிகமாக அனுமதியில்லை என நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா தெரிவித்துள்ளார். இந்த தடை ஏப்ரல் 11-ம் தேதி முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்