தப்பிச்சிட்டோம்! 100 நாட்களாக 'கொரோனா' பரவல் இல்லை... அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 100 நாட்களாக கொரோனா பரவல் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
வல்லரசு நாடுகள், வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என உலகின் பெரும்பான்மை நாடுகள் கொரோனா கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. ஆனால் ஒருசில நாடுகள் இதில் கொரோனா பரவலை தடுத்து சாதனை செய்து வருகின்றன. அவற்றுள் நியூசிலாந்து நாடும் ஒன்று.
இந்த நிலையில் கொரோனா பரவல் இல்லாமல் 100 நாட்களை கடந்த நாடு என்னும் பெருமை நியூசிலாந்துக்கு கிடைத்திருக்கிறது. 100 நாட்களாக உள்ளூர் மக்கள் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்றும், தற்போது 23 பேர் மட்டுமே சிகிச்சை எடுத்து வருவதாகவும் அந்நாடு தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கொரோனா பரவல் இல்லாமல் 100 நாட்களை கடப்பது மிகப்பெரிய மைல்கல். ஆனால் நாம் அனைவரும் மனநிறைவுடன் இருக்க முடியாது. எதிர்காலத்தில் மீண்டும் கொரோனா பரவல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்,'' என குறிப்பிட்டு உள்ளது.
மற்ற செய்திகள்