'ஆட்டை கசாப்பு கடைக்கு கொண்டு போவாங்கல'...'கதறிய பெண் மருத்துவர்'... அதிரவைக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு செல்லும்போது ஆடு வெட்டப்படும் இடத்திற்கு செல்வதுபோல் உணர்கிறேன் என, இளம் பெண் மருத்துவர் கூறியுள்ளார். அதற்கு அவர் கூறியுள்ள காரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

'ஆட்டை கசாப்பு கடைக்கு கொண்டு போவாங்கல'...'கதறிய பெண் மருத்துவர்'... அதிரவைக்கும் காரணம்!

கொரோனா வைரஸ் உலக மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டுவிட்டது. உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு தற்போது அனைத்து இரவுகளும் தூங்கா இரவுகளாவே கழிகின்றன. தற்போது உலகமுழுவதும் 10 லட்சத்து 33 ஆயிரத்து 478 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 54 ஆயிரத்து 369 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 175 பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இது அந்த நாட்டின் சுகாதர துறைக்கு பெரும் சவாலாக திகழ்கிறது.எ அவர்கள் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள். இதற்கிடையே மான்டிஃபியோர் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும்  இளம் பெண் டாக்டர் லாரா உய்க் என்பவர், மருத்துவர்கள் படும் துயரம் குறித்து கண்ணீருடன் கூறியுள்ளார். மேலும் மருத்துவர்களையும், நோயாளிகளையும் காப்பாற்றுவது கடினமான செயலாக உள்ளது என கதறியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு செல்லும்போது ஆடு பலிகொடுக்கும் இடத்திற்கு செல்வது போல் உணர்கிறேன், என தனது அச்ச உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். இளம் மருத்துவர் இவ்வாறு கூறியதற்கு பின்னால் இருக்கும் காரணம் தான் பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. நாளுக்கு நாள் நோய் தோற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கு மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கவசங்களுக்கு பெருமளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து டாக்டர் லாரா உய்க் கூறுகையில், ''இந்த கொடூர தொற்றில் இருந்து தப்பிக்க முடியாமல் போய்விடலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம். இருந்தாலும் இதுவரை எங்களுடைய மக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனைக்கு வந்து செல்கிறோம்'' என வேதனையுடன் கூறியுள்ளார்.

CORONA, CORONAVIRUS, DOCTORSPROTEST, NEW YORK, TRUMP