'பஸ் பாஸ்' மாதிரி... இது 'தடுப்பூசி பாஸ்'!.. வீட்டை விட்டு வெளிய வந்தா... 'இது' கட்டாயம்!.. அதிரடி திட்டத்தை கையிலெடுத்த நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொது இடங்களுக்கு வருவதற்குக்கூட தடுப்பூசி பாஸ் முறை கொண்டுவந்தால் எப்படி இருக்கும்!?.. அப்படி ஒரு திட்டம் தற்போது அமலுக்கு வருகிறது.

'பஸ் பாஸ்' மாதிரி... இது 'தடுப்பூசி பாஸ்'!.. வீட்டை விட்டு வெளிய வந்தா... 'இது' கட்டாயம்!.. அதிரடி திட்டத்தை கையிலெடுத்த நாடு!

உலகம் முழுவதும் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதையொட்டி, பல நாட்டின் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திவருகின்றன.

அந்த வகையில், தடுப்பூசி போட்டுக்கொள்வது இன்றியமையாததாகிறது. மேலும், தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் வெளிநாட்டு பயணத்துக்கு கட்டாயம் என்ற நிலையில் இருந்து, வீட்டைவிட்டு வெளியே வந்தால் கூட தடுப்பூசி சான்றிதழ் (vaccine pass) அவசியம் என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், Key to NYC என்ற பெயரிலான 'தடுப்பூசி பாஸ்' முறை வரும் 16ம் தேதி தொடங்கப்படும் என நியூ யார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ( Bill de Blasio ) அறிவித்துள்ளார்.

அதன்படி உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வருபவர்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தை காண்பிப்பது கட்டாயமாகும். இதுவே தடுப்பூசி பாஸ் என்று அழைக்கப்படுவதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்