IKK Others
MKS Others

இனிமேல் வாரத்துல '4 நாள்' ஆபீஸ் வந்தா போதும்...! 'மூணு நாள் லீவ்...' - அதிரடி 'அறிவிப்பை' வெளியிட்ட நாடு...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஐக்கிய அமீரக கூட்டமைப்பு நாடுகளில் புதிய பணி நேரம் அறிமுகப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இனிமேல் வாரத்துல '4 நாள்' ஆபீஸ் வந்தா போதும்...! 'மூணு நாள் லீவ்...' - அதிரடி 'அறிவிப்பை' வெளியிட்ட நாடு...!

பொதுவாக உலக நாடுகளில் மக்களின் அலுவலக பணி நாட்கள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரையும், பணி நேரம் காலை முதல் இரவு வரை இருக்கும்.

ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டமைப்பு கீழ் இருக்கும் இஸ்லாமிய நாடுகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் என்பதால்,வெள்ளிக்கிழமை மட்டும் சனி ஆகிய இரு தினங்கள் விடுமுறை விட்டு  ஞாயிற்றுக்கிழமை அலுவலக பணிக்கு செல்வர்.

ஆனால் தற்போது துபாய் அரசு திங்கள் கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை 8 மணி நேரம் அலுவலக நேரமாகவும், வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை 4.30 வரை அலுவலக நேரமாகவும் இருக்கும் என அறிவித்தது.

இந்த அறிவிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டமைப்பு நாடுகளான, ரஸ்ஸல் கைமா, அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மன், உம் அல் குவைன் மற்றும் புஜைராவில், வருகிற 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 'நாட்டின் வணிகச் சூழல் மற்றும் பொருளாதாரச் சந்தையை ஆதரிக்கும், மேலும் உலக வளர்ச்சியுடன் வேகத்தைத் தொடரும்' எனவும் ஷார்ஜா அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதோடு, அரசு ஊழியர்களுக்கு திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாட்கள் வேலை நாட்கள் எனவும், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை எனவும் ஷார்ஜா அரசு உத்தரவிட்டுள்ளது 

பணி நேரம், சார்ஜா, WORKING HOURS, SHARJAH, UAE

மற்ற செய்திகள்