ராணியின் மறைவிற்கு பிறகு வெளியிடப்பட்ட புதிய நாணயங்கள்.. அதுல இருந்த விஷயத்தை பார்த்து குழம்பிய மக்கள்.. ஆனா 400 வருஷமாவே இப்படித்தானாம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையடுத்து, அரசராக பொறுப்பேற்றிருக்கிறார் மூன்றாம் சார்லஸ். இந்நிலையில், அரச வழக்கப்படி அவரது தலைபொறித்த நாணயங்களை அரசர் வெளியிட்டிருக்கிறார். அதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களின் அர்த்தமும் வெளிவந்திருக்கின்றன.
இரண்டாம் எலிசபெத்
பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இரண்டாம் எலிசபெத். அப்போது அவருக்கு வயது 25. பிரிட்டன் வரலாற்றில் நீண்டகாலம் ராணியாக இருந்த பெருமை இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. அவருடைய ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்திருக்கிறார். நெடுநாள் ராணியாக பதிவி வகித்த அவர் கடந்த 8 ஆம் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மூன்றாம் சார்லஸ்
இங்கிலாந்து ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் மறைந்ததை முன்னிட்டு, அவருடைய மகன் மூன்றாம் சார்லஸ், அரச பொறுப்பை ஏற்றிருக்கிறார். இதனையடுத்து அரச வழக்கப்படி, 50 பென்ஸ் மற்றும் 5 பவுண்டு நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதில் சார்லஸின் தலை இடப்பக்கம் பார்த்தபடி பொறிக்கப்பட்டிருக்கிறது. ராணியின் தலை பொறிக்கப்பட்ட நாணயங்களில் அவரது முகம் வலப்பக்கம் பார்த்தபடி அமைந்திருக்கும்.
இதற்கும் ஒரு காரணம் இருக்கிறதாம். 1600 ஆம் ஆண்டு முதல் ஆட்சிப்பொறுப்பிற்கு வரும் நபர்கள் முந்தைய ஆட்சியில் இருந்தவர்களின் காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் இருப்பதற்கு எதிர்திசையில் நாணயங்களை பொறிக்க உத்தரவிடுவார்களாம். அப்படி இரண்டாம் எலிசபெத்தின் காலத்தில் அவருடைய முகம் வலப்பக்கம் நோக்கி இருந்தபடி நாணயங்கள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இடப்பக்கம் நோக்கியபடி சார்லஸின் தலை பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளிவந்திருக்கின்றன.
நாணயங்கள்
மேலும், இந்த நாணயங்களில் CHARLES III. D.G. REX. F.D எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. லத்தீனில் பொறிக்கப்பட்டிருக்கும் இதனுடைய அர்த்தம் King Charles III, by the Grace of God, Defender of the Faith (மூன்றாம் சார்லஸ் மன்னர், கடவுளின் அருளால், நம்பிக்கையின் பாதுகாவலர்) என்பதாகும். அரசர் தனிப்பட்ட முறையில் இந்த நாணயங்களை அங்கீகரித்திருக்கிறார். இந்த நாணயங்கள் பிரிட்டிஷ் சிற்பி மார்ட்டின் ஜென்னிங்ஸால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மற்ற செய்திகள்