'ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித இனம்'... 'நமக்கும் அந்த மனித இனத்துக்கும் என்ன தொடர்பு'?... வெளியான ஆச்சரிய தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்இதுவரை ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்படாத பூமியில் வாழ்ந்த ஆதி மனித இனம் வாழ்ந்ததற்கான அடையாளத்தை இஸ்ரேல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டின் ராம்லா நகரில் ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் இதுவரை மனித இனம் தொடர்பாகக் கிடைத்த தரவுகளில் கிடைக்காத ஆதி மனிதர்களுடைய மண்டை ஓடு மற்றும் தாடை பகுதி கிடைத்துள்ளது. ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளுடன் இவை ஒத்துப்போகவில்லை.
இந்த ஆராய்ச்சி தொடர்பான ஆய்வுக்கட்டுரை சயின்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. அதில், டெல் அவிவ் மானுடவியலாளர்களும், ஆய்வை தலைமை ஏற்று நடத்திய தொல்பொருள் ஆய்வாளர் யோசி ஜைட்னர் ஆகியோர் ‘நேஷர் ராம்லா ஹோமோ’ இனம் என வகைப்படுத்தியுள்ளனர். ராம்லா நகரில் வாழ்ந்துள்ள இந்த ஆதி மனித இனத்தினர் அங்குக் கடைசியாக வாழ்ந்திருக்கலாம் எனக் கருதும் ஆய்வாளர்கள், சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வாழ்ந்த காலப்பகுதியாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆதி மனித இனம் இப்போது இருக்கும் மனித இனத்துடன் துளியும் ஒத்துப்போகவில்லை என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தாடை, மண்டை ஓடு அமைப்பு வித்தியாசமாக இருப்பதுடன், நீண்ட பல் அமைப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர். ராம்லா நகரில் மனித எச்சங்கள் மட்டுமின்றி விலங்குகளின் எலும்புகள், கற்கருவிகளையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கிழக்காசியப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட சில படிமங்கள் நேஷர் ராம்லா ஹோமோ இனத்துடன் ஒத்துப்போவதாகவும் ஹெர்ஸ்கோவிச் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆய்வு ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், முன்கூட்டியே நியாண்டர்தால்களுடன் தொடர்புப்படுத்துவது சரியாக இருக்காது எனக் கூறியுள்ள அவர், இந்த கண்டுபிடிப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் ஐரோப்பிய, ஆசியப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித படிமங்களின் இடையே இருக்கும் ஒற்றுமையை வைத்து, மனித இனத்துக்கு இடையே இருக்கும் தொடர்பை யூகித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்