‘இரண்டரை மணிநேரத்தில்’.. கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் புதிய சோதனை.. அசத்திய பிரபல ஆய்வு நிறுவனம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தொற்று இருப்பதை சுமார் இரண்டரை மணிநேரத்தில் கண்டுபிடிக்கும் புதிய சோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘இரண்டரை மணிநேரத்தில்’.. கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் புதிய சோதனை.. அசத்திய பிரபல ஆய்வு நிறுவனம்..!

கொரோனா தொற்று இருப்பதை கண்டுபிடிக்கும் சோதனைக்கு இப்போது பல நாட்கள் அவகாசம் தேவைப்படுகிறது. இந்த நிலையில் சுமார் இரண்டரை மணிநேரத்தில் கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் சோதனை முறையை உருவாக்கி உள்ளதாக பிரபல ஜெர்மன் மருத்துவ ஆய்வு நிறுவனமான போஷ் (Bosch) தெரிவித்துள்ளது.

இதற்காக Vivalytic molecular diagnostics platform என்ற சோதனை முறையை உருவாக்கி உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனாவை எதிர்கொள்ள இந்த புதிய சோதனை முறை உதவிகரமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த பரிசோதனை முறை ஏற்கனவே நிமோனியா, இன்புளூவன்சா போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டாலும், தற்போது அது கொரோனாவை கண்டுபிடிக்கும் வகையில் புதிய மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

CORONAVIRUS, CORONA, COVID19, BOSCH