மின் வேலைக்காக சென்ற ஊழியர்கள்.. காட்டுக்குள் இருந்து வந்த சத்தம் .. பின்தொடர்ந்து சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி காட்சி!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கனடாவின் New Brunswick காட்டுப் பாதை வழியே மின் ஊழியர்கள் மின் வேலைக்காக ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர்.

மின் வேலைக்காக சென்ற ஊழியர்கள்.. காட்டுக்குள் இருந்து வந்த சத்தம் .. பின்தொடர்ந்து சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி காட்சி!

அப்போது ஒரு ஊழியரை மட்டும் இறங்கச் சொல்லி மின் பொருட்களை எடுத்துவரச் சொல்லியுள்ளனர். அவரும் இறங்கி வேலை பார்த்தபோது, ‘காப்பாத்துங்க’ என பெண் ஒருவரின் அழுகைக் குரல் கேட்டு அதிர்ந்துபோன அந்த ஊழியர், எப்படியேனும் உதவி செய்ய வேண்டும் என்று எண்ணி, தனது சக நண்பர்களையும் போலீஸாரையும் அவர் அழைக்க, அவர்களும் வந்துள்ளனர்.

அதன் பின்னர் இவர்கள் அனைவரும் அந்த அழுகுரல் வந்த திசையை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போதுதான் அங்கு இருந்த Jenny McLaughlin என்கிற பெண்ணை கண்டுபிடித்து அங்கு ஹெலிகாப்டர் செல்ல முடியாது என்பதால் 1.3 கிமீ தூரம் ஸ்ட்ரெட்சரில் வைத்து அப்பெண்ணை போலீஸாரும் ஊழியர்களும் தூக்கிவந்து காப்பாற்றியுள்ளனர்.

அந்த வனப்பகுதிக்குள் Jenny McLaughlin எதற்காக சென்றார் என்பது இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், உணவின்றி கிடைத்த பழங்களையும் தண்ணீரையும் உண்டதுடன், காட்டு விலங்குகளுக்கு மத்தியில், தனக்கு அன்பானவர்கள் வீட்டில் தனக்காக காத்திருக்கிறார்கள் என்கிற எண்ணமே தன்னை உயிருடன் இருத்தி வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்