‘இந்த துறையில் பொறுப்பேற்கும் முதல் பெண்... அதுவும் இந்திய பெண்!’.. அடுத்தடுத்து இந்தியர்களை அசர வைக்கும் பைடன்.. யார் இந்த நீரா டாண்டன்?
முகப்பு > செய்திகள் > உலகம்கமலா ஹாரிஸ் அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது அமெரிக்கவாழ் இந்தியர்களை மட்டுமல்லாமல் இந்தியர்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், பொருளாதாரக் குழு ஒன்றை அமைத்திருக்கிறார். அதில் பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை பிரிவின் இயக்குநராக (Director of the Office of Management and Budget-OMB), இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டனை நியமிக்க முடிவு செய்துள்ளார்.
இந்தப் பிரிவில் ஒரு பெண் தலைமைப் பொறுப்பை ஏற்பது இதுவே முதல் முறை. 50 வயதான நீரா டாண்டன் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் பிறந்த இவர், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து, யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியில் இருந்து அதை மீட்டு, மீண்டும் சரியாகக் கட்டமைக்க தான் நியமித்திருக்கும் பொருளாதாரக் கமிட்டி தீவிரமாகப் பணியாற்ற இருப்பதாக பைடன் அறிவித்திருக்கிறார்.இந்நிலையில் ஜோ பைடன் உருவாக்கிய பொருளாதாரக் குழுவில் நீரா டாண்டனைத் தவிர அமெரிக்கவாழ் இந்தியர்களான விவேக் மூர்த்தி மற்றும் அருண் மஜும்தார் ஆகியோரும் இடம்பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பேசிய நீரா டாண்டன் , “என் சிறுவயதில் பெற்றோர் விவாகரத்து பெற்றனர். பிறகு, அரசு உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றை நம்பியே என்னுடைய தாய் இருந்தார். இப்போது, அப்படியான திட்டங்களை எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது பெரும் அங்கீகாரம். மகிழ்வுடனும் கண்ணியத்துடனும் எளிய மக்கள் வாழ உதவுவேன், அவர்களின் வலியை நன்கு உணர்வேன் நான்” என்று நெகிழ்ந்துள்ளார்.
மற்ற செய்திகள்