“லேண்டிங் கியர் வேலை செய்யல!”.. வந்த வேகத்தில், குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்.. விமானிகள், பயணிகள், குடியிருப்புவாசிகள் உட்பட 99 பேர் பலி!!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானில் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்த விமானம் கராச்சியில் தரையிறங்கும் போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 7 விமான ஊழியர்கள், பயணிகள், குடியிருப்புவாசிகள் உட்பட 99 பேர் பலியாகியுள்ளதாக வந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
முன்னதாக கராச்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரி, இரண்டு ஓடுதளங்கள் தயாராக இருப்பதாகவும் எதில் வேண்டுமானாலும் தரையிறக்கி கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்ததை அடுத்து, வானில் ஒரு முறை வட்டம் அடித்து விட்டு கராச்சி விமான நிலையத்தின் ஒரு ஓடுதளத்தில் தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரியிடம், லேண்டிங் கியரில் பிரச்சினை உள்ளதாகவும், இதனால் எஞ்சின் செயல் இழந்து வருவதாகவும் கேப்டன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இரண்டாவது முறை விமானம் தரையிறக்கம் முயற்சிக்கப்படும் போது ஓடுதளத்திற்கு அருகே உள்ள மலிர் நகரின் மாடல் காலனி என்கிற குடியிருப்புப் பகுதியின் மீது விமானம் விழுந்து கோர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து சம்பவத்தில் 7 விமானிகள், பயணிகள், குடியிருப்பு வாசிகள் உட்பட 99 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்