COBRA M Logo Top

நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் வெளியிட்ட 'Phantom Galaxy'-யின் திகைக்க வைக்கும் புகைப்படம்.. வெளிச்சத்துக்கு வந்த பல வருஷ மர்மம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி Phantom Galaxy ஐ படம் எடுத்திருக்கிறது. இதுவரையில் வேறு எந்த தொலைநோக்கிகளும் இத்தனை துல்லியமாக இந்த கேலக்சியை படம் எடுத்ததில்லை என்கிறார்கள் நிபுணர்கள். மேலும், இந்த புகைப்படம் மூலம் பல கேள்விகளுக்கு விடை கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறது நாசா.

நாசாவின் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் வெளியிட்ட 'Phantom Galaxy'-யின் திகைக்க வைக்கும் புகைப்படம்.. வெளிச்சத்துக்கு வந்த பல வருஷ மர்மம்..!

Also Read | 3 வாரமா நடந்த 'ஆய்வு'.. 13 ஆம் நூற்றாண்டு'ல இருந்த இடம் பத்தி தெரிய வந்த உண்மை.. மிரண்டு போன ஆய்வாளர்கள்

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பில் இருந்து பிரபஞ்சம் உருவானதாக பொதுவாக ஆராய்ச்சியாளர்களால் நம்பப்படுகிறது. இருப்பினும் பிரபஞ்ச உருவாக்கம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு நம்மால் இன்னும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த பல வருட மர்மத்தை வெளிக்கொண்டுவரவே ஜேம்ஸ் வெப் எனப்படும் தொலைநோக்கியை 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 80 ஆயிரம் கோடி) செலவில் உருவாக்கியது நாசா.

NASA Webb Telescope captures Phantom Galaxy Pic goes viral

கடந்த டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கி மனித குல வரலாற்றின் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 6.2 டன் எடைகொண்ட இந்த தொலைநோக்கி -230 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் இயங்கக்கூடியது. இது, முன்னர் நாசாவால் அனுப்பப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி போல 100 மடங்கு சக்திவாய்ந்தது.

Phantom Galaxy

பொதுவாக M74 என்று அழைக்கப்படும் இந்த கேலக்சி நம்முடைய பால்வழி அண்டத்தை போலவே, சூழல் வடிவில் அமைந்திருக்கிறது. இந்த கேலக்சியை தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தில் கேலக்சியின் உள்ளே வாயு மற்றும் தூசுக்கள் இருப்பதையும் புலப்படுத்தியுள்ளது. மேலும், கேலக்சியின் நடுவே நட்சத்திர கூட்டம் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. சுமார் 32 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள இந்த கேலக்சி குறித்த ஆய்வுக்கு இந்த புகைப்படம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

NASA Webb Telescope captures Phantom Galaxy Pic goes viral

ஆய்வு

முன்னதாக நாசா அனுப்பிய ஹப்பிள் தொலைநோக்கியும் இதே கேலக்சியை படம் பிடித்திருந்தது. இருப்பினும் தற்போது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படம் அதி துல்லியமாக அமைந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். வெப் தொலைநோக்கி அகச்சிவப்பு கதிர்கள் மூலமாக (MIRI) ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. இது அண்டை விண்மீன் கூட்டம் உருவாவது பற்றிய PHANGS (Physics at High Angular resolution in Nearby GalaxieS)  ஆய்வுக்கு உதவிகரமானதாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

NASA Webb Telescope captures Phantom Galaxy Pic goes viral

இதன்மூலமாக நட்சத்திரக் கூட்டங்களின் நிறை மற்றும் வயதை அளக்க, விண்மீன்களுக்கு இடையே பரவியுள்ள தூசுக்களின் நிலையை அறிய ஆய்வாளர்களுக்கு உதவும். மேலும், விண்மீன் கூட்டங்களில் நட்சத்திர உருவாக்கம் எப்படி நடைபெறுகிறது என்ற ஆய்வுக்கும் இது புதிய பாதையை வகுக்கும் என நம்பப்படுகிறது.

Also Read | பனிப்போரை முடிவிற்கு கொண்டுவந்த மிகைல் கோர்பசேவ் மறைவு .. உலக தலைவர்கள் இரங்கல்.. யார் இவர்..?

NASA WEBB TELESCOPE, NASA WEBB TELESCOPE CAPTURES, PHANTOM GALAXY, நாசா, ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்

மற்ற செய்திகள்