Naane Varuven M Logo Top
PS 1 M Logo Top

அமெரிக்காவை புரட்டிப்போட்ட புயல்.. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட நாசா.. யம்மாடி என்ன இப்படி இருக்கு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையே புரட்டிப்போட்ட இயான் புயலின் தாக்கம் குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை புரட்டிப்போட்ட புயல்.. விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட நாசா.. யம்மாடி என்ன இப்படி இருக்கு..!

Also Read | இயற்கையின் இன்னொரு முகம்.. 30 நிமிஷத்துல இடத்தையே தலைகீழா புரட்டிப்போட்ட புயல்.. மிரள வைக்கும் வீடியோ..!

இயான் புயல்

அட்லாண்டிக் கடலில் மையம் கொண்டிருந்த இயான் புயல் கடந்த செவ்வாய்க்கிழமை கியூபாவை தாக்கியது. இதனால் அந்நாட்டின் மின்கட்டுமானம் மொத்தமாக சேதமடைந்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் கடுமையான மழைப்பொழிவு ஒரு பக்கமும், அதிவேக புயல்காற்று ஒருபக்கமும் போட்டு புளோரிடாவை வதைத்து வருகிறது.

Nasa shares startling video of hurricane Ian seen from space

இந்த இயான் புயல் அமெரிக்கா சந்தித்த மோசமான புயல்களில் ஒன்று என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். புளோரிடாவில் புயல் காரணமாக மணிக்கு 245 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிவருகிறது. இதனால் சுமார் 2 மில்லியன் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக 2.5 மில்லியன் மக்கள் வெளியேறும்படி நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுவரையில் 20 பேரை காணவில்லை என மீட்புப்படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

தேசிய வானிலை சேவை இயக்குனர் கென் கிரஹாம் இதுபற்றி பேசுகையில், "இது பல ஆண்டுகளுக்கு நாம் பேசும் புயலாக இருக்கும். இது ஒரு வரலாற்று நிகழ்வு" என்றார். இந்த புயலினால் புளோரிடா மட்டும் அல்லாது தென்கிழக்கு மாநிலங்களான ஜார்ஜியா மற்றும் தென் கரோலினாவில் பல மில்லியன் மக்களை பாதிக்கும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Nasa shares startling video of hurricane Ian seen from space

திகைக்க வைக்கும் வீடியோ

இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சர்வதேச விண்வெளி அமைப்பு இயான் புயலை கடக்கும் நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது நாசா. பூமியில் இருந்து சுமார் 415 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியாகி பலரையும் திகைக்க வைத்திருக்கிறது. இதுவரையில் இந்த வீடியோவை 1.6 மில்லியன் மக்கள் பார்த்திருக்கின்றனர்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NASA (@nasa)

Also Read | உலக பணக்காரர்கள் பட்டியல்.. திடீர் பின்னடைவை சந்தித்த தொழிலதிபர் அதானி.. முழுவிபரம்..!

NASA, HURRICANE IAN, SPACE, NASA SHARES VIDEO OF HURRICANE IAN, நாசா

மற்ற செய்திகள்