'அப்போ நிலவுக்கு போயிட்டு...' 'பூமிக்கு போன் பண்ணலாம் போலையே...' - நிலவில் வரப்போகும் 4G நெட்வொர்க்...!
முகப்பு > செய்திகள் > உலகம்பின்லாந்து நிறுவனமான நோக்கியாவுடன் நிலவில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க நாசா ஒப்பந்தமிட்டுள்ளது
விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வரும் 2018ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி, ஆய்வுகளை மேற்கொண்டு நிலவில் 4ஜி நெட்ஒர்க்க்கை அமைக்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது நாசா.
மேலும் அதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க, பல நிறுவனங்களுடன் இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 714 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் நிலவில் ஆய்வு செய்யும்போது விண்வெளி வீரர்கள் விண்கலத்துடன் தொடர்புகொள்வதற்கும், எச்டி தரத்திலான படங்களை அனுப்பவும், நிலவின் மேற்பரப்பில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க நோக்கியாவுக்கு இந்திய மதிப்பில் 102 கோடி ரூபாயை நாசா வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்