விண்வெளி'லயும் சாப்பாடு தான் பிரச்சன போல.. முழிக்கும் நாசா.. ஐடியா குடுத்தா 7.4 கோடி ரூபாய் பரிசு குடுக்குறாங்களாம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

விண்வெளி வீரர்களுக்கு உணவு வழங்குவதில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய, ஆலோசனை கொடுப்பவர்களுக்கு மிகப் பெரிய பரிசு தொகையை நாசா அறிவித்துள்ளது.

விண்வெளி'லயும் சாப்பாடு தான் பிரச்சன போல.. முழிக்கும் நாசா.. ஐடியா குடுத்தா 7.4 கோடி ரூபாய் பரிசு குடுக்குறாங்களாம்

விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்கு நிறைய சவால்கள் உள்ளன. விண்வெளிக்கு செல்லும் வீரர்கள், ஒவ்வொரு திசையில் பறந்து கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படி இருப்பவர்களுக்கு, அதிக கவனத்துடன் இருக்கக் கூடிய ஏராளமான சவால்களும் நிறைந்துள்ளது. விண்வெளியில் பயன்படுத்தக் கூடிய உடைகள், பொருட்கள், உணவுகள் என அனைத்திலுமே அதிக கட்டுப்பாடுகள் உள்ளது.

நாசா அறிவிப்பு

இதைப் பற்றிய பல்வேறு ஆய்வுகள் தற்போதும் நடைபெற்று வருகிறது. இதில், விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு என்று பிரத்யேகமான உணவு வகைகள் தயாரிக்கபடட்டும் வருகிறது. சில கட்டுப்பாடுகளுடன் கூடிய குறைந்த உணவு வகைகளை மட்டும் தான் அங்கே சாப்பிட முடியும்.

இந்நிலையில், இதனை மாற்றி அமைக்கும் வகையில், விண்வெளி வீரர்களின் உணவு வகைகளில், புதுமையான கண்டுபிடிப்புகளை கொண்டு வருவோருக்கு, 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 7.4 கோடி ரூபாய்) வழங்கப்படும் என நாசா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக, பலரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Food Challenge

'Deep Space Food Challenge' என்ற பெயரில், இதனை அறிமுகம் செய்துள்ள நாசா, எப்படிப்பட்ட உணவு வகைகளாக அவை இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு, சத்தான, புதுமையான அதே வேளையில் நீண்ட நாள் கெடாத உணவு வகைகளை வழங்க வேண்டும். இதற்கான சிறந்த தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் நபர்களுக்கு இந்த பணம் வழங்கப்படும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.

சிறந்த தொழில்நுட்பம்

இந்த திட்டம் பற்றி நாசா உணவு துறையின் தலைமை அதிகை ஜிம் ராய்ட்டர் பேசுகையில், 'விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவு வகைகளை தயாரிப்பதில் ஏகப்பட்ட சவால்கள் உள்ளன. குறிப்பாக, அவை நீண்ட காலம் கெடாமல் இருப்பதில் தான் அதிக சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இதை எல்லாம் தாண்டி, உணவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை, விண்வெளி வீரர்கள் சாப்பிடும் வகையில், சிறந்த தொழில் நுட்பங்களைக் கொண்டு உருவாக்க வேண்டும்.

தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகளை தான் விண்வெளி வீரர்கள் சாப்பிட்டு வருகின்றனர். இருந்த போதும், அதில் அனைத்து வகையிலான சத்துக்களும் கிடைப்பதில்லை' என ஜிம் ராய்ட்டர் குறிப்பிட்டுள்ளார்.

NASA, FOOD CHALLENGE, SPACE, ASTRONAUTS, விண்வெளி, நாசா

மற்ற செய்திகள்