Battery Mobile Logo Top
The Legend

நிலவுல இருக்கும் மர்ம குகை... ஆய்வு செஞ்சப்போ தெரியவந்த உண்மை.. சந்தோஷத்தில் நாசா ஆராய்ச்சியாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நிலவில் இருக்கும் குகை போன்ற பகுதி ஒன்றில் வெப்பநிலை சீராக இருப்பதாக நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது நிலவு பற்றிய ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல் சாதனையாக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நிலவுல இருக்கும் மர்ம குகை... ஆய்வு செஞ்சப்போ தெரியவந்த உண்மை.. சந்தோஷத்தில் நாசா ஆராய்ச்சியாளர்கள்..!

Also Read | நாட்டின் மிகப்பெரிய திருட்டு.. "நகையை கண்டுபிடிச்சு கொடுக்குறவங்களுக்கு 57 கோடி ரூபாய் தர்றேன்".. தொழிலதிபரின் மகள் வெளியிட்ட பரபர அறிவிப்பு..!

நிலவு

பூமியின் துணைக்கோளான நிலவில் பல வருடங்களாக உலக நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் நிலவில் நீண்ட காலத்துக்கு ஆராய்ச்சியில் ஈடுபட சாத்தியம் இல்லை. இதற்கு காரணம் அங்கு நிலவும் கடினமான வெப்பநிலை. இதனை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் எடுத்துவந்த நிலையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் நிம்மதி அடைந்துள்ளன.

Nasa finds pits with comfortable weather on Moon

தகிக்கும் வெப்பநிலை

நிலவில் சராசரியாக பகலில் 260 ° F (126 ° C) வரையிலும், இரவில் பூஜ்ஜியத்திற்கு கீழே (-173 °) 280 ° F வெப்பநிலை குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக நிலவில் நீண்ட கால ஆராய்ச்சிக்கான கூடங்களை நிறுவ முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் தவித்து வந்தனர். ஆனால், கடந்த 2009 ஆம் ஆண்டு நிலவில் சுரங்கம் போன்ற பகுதி கண்டறியப்பட்டது. நிலவில் கண்டுபிடிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட இதுபோன்ற குழிகளில் 16 குழிகள் எரிமலை குழம்புகளால் உருவானவையாக இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதனை நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அந்த சுரங்கம் போன்ற பகுதிக்குள் வெப்பநிலை 17 டிகிரி மட்டுமே இருப்பதாகவும் இதனால் அங்கே தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Nasa finds pits with comfortable weather on Moon

சுரங்கங்கள்

பூமியிலும் இதுபோன்ற சுரங்கங்கள் காணப்படுகின்றன. இத்தகைய சுரங்கங்கள், உருகிய எரிமலைக் குழம்புகள் குளிர்ந்த எரிமலைக் குழம்புக்கு அடியில் பாயும் போது உருவாகின்றன. சில நேரங்களில் எரிமலை குழம்பின் மீது மேலோடு உருவாகி பின்னர் அதுவே நீண்ட சுரங்கப்பாதையை உருவாக்குவதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Nasa finds pits with comfortable weather on Moon

நிலவில் நிலையான ஆய்வுக்கூடங்களை அமைக்க தகுந்த இடத்தினை நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருப்பது விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

Also Read | இதுவரை இவ்வளவு பெரிய பிங்க் வைரத்தை நாங்க பார்த்தது இல்ல.. நிபுணர்களையே திகைக்க வச்ச வைரக்கல்..!

WEATHER, NASA, MOON, NASA FINDS PITS

மற்ற செய்திகள்