செவ்வாய் கிரகத்துல இருக்கும் ரகசிய பாதை?.. வைரலாகும் புகைப்படங்கள்.. ஆராய்ச்சியாளர்கள் சொல்லிய உண்மை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

செவ்வாய் கிரகத்தில் ரகசிய பாதை போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது தற்போது சமூக வலை தளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

செவ்வாய் கிரகத்துல இருக்கும் ரகசிய பாதை?.. வைரலாகும் புகைப்படங்கள்.. ஆராய்ச்சியாளர்கள் சொல்லிய உண்மை..!

கியூரியாசிட்டி ரோவர்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி கியூரியாசிட்டி ரோவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் தட்பவெட்ப நிலை, நில அமைப்பு, அங்கே உயிர்கள் வாழ சாதகமான சூழ்நிலை இருக்கிறதா? என்பதை கண்டறிவதே இந்த ரோவரின் நோக்கமாகும். இந்த விண்கலம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது. அன்று துவங்கி பல்வேறு மாதிரிகளை சேகரிப்பதுடன், புகைப்படங்களை அனுப்பிவரும் இந்த ரோவர் கடந்த 7 ஆம் தேதி அனுப்பிய புகைப்படம் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

NASA Curiosity Rover Finds A Doorway On Mars Picture surface

ரகசிய வழி?

நாசா அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் தற்போது செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஷார்ப் மலையில் ஆய்வு செய்துவருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் மலையில் ஒரு ரகசிய பாதை இருப்பது போன்ற வடிவம் தென்படுகிறது. இது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், இது ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகளின் புகலிடமாக இருக்கலாம் எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டுவருகின்றனர்.

NASA Curiosity Rover Finds A Doorway On Mars Picture surface

உண்மை என்ன?

செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக சொல்லப்படும் இந்த ரகசிய பாதை வடிவிலான தோற்றம் குறித்து பேசிய Mars Science Laboratory -ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளரான அஷ்வின் வசவாடா,"கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பிய புகைப்படத்தில் உள்ள பாதை போன்ற அமைப்பு பல ஆண்டுகளாக மணற்குன்றுகள் அரிப்பிற்கு உள்ளாவதால் ஏற்படும் தோற்றம் தான். இந்த மணற்குன்றுகளில் உள்ள அழுத்தம் காரணமாக இப்படி விரிசல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அருகாமையில் உள்ள இரண்டு விரிசல்களினால் ஏற்பட்ட வெற்றிடமே பாதை போன்று காட்சியளிக்கிறது. இது 30 செமீ உயரம் இருக்கலாம்" என்றார்.

அதேபோல புவியியல் நிபுணரான நீல் ஹாக்கின்ஸ் இதுபற்றி குறிப்பிடுகையில்," சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த பாதை போன்ற தோற்றம் பல விவாதங்களை கிளப்பியுள்ளது. ஆனால், இது இயற்கை காரணிகளால் ஏற்பட்ட பாறை மட்டுமே. அரிப்பின் காரணமாக இந்த தோற்றம் உருவாகியிருக்கலாம் என நினைக்கிறேன்" என்றார்.

NASA Curiosity Rover Finds A Doorway On Mars Picture surface

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாதை போன்ற அமைப்பு சமூக வலை தளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பிவந்த நிலையில், அது மணற்குன்றுகளின் மீது அதிவேகத்தில் காற்று தொடர்ந்து மோதியதால் உருவான அமைப்பு என ஆய்வாளர்கள் தற்போது தெரிவித்திருக்கிறார்கள்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

MARS, DOORWAY, NASA, செவ்வாய், ரகசியபாதை, கியூரியாசிட்டி, CURIOSITYROVER

மற்ற செய்திகள்