‘எலக்சன் நடக்குறப்போ விண்வெளியில இருப்பேன்...’ அதனாலென்ன...! ‘கண்டிப்பா அங்க இருந்து ஓட்டு போடுவேன்...’ - எப்படி பாசிபிள்...?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நாசா விண்வெளி வீராங்கனையான கேட் ரூபின்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க இருப்பதாக கூறியுள்ளார்.

‘எலக்சன் நடக்குறப்போ விண்வெளியில இருப்பேன்...’ அதனாலென்ன...! ‘கண்டிப்பா அங்க இருந்து ஓட்டு போடுவேன்...’ - எப்படி பாசிபிள்...?

கேட் ரூபின்ஸ் நாசா விண்வெளி வீராங்கனை ஆவார். இவர் வரும் அக்டோபர் மாதத்தின் இடைப்பட்ட நாட்களில் விண்வெளிக்குச் செல்வதற்காக, தற்போது ரஷ்யாவில் தங்கி பயிற்சி எடுத்து வருகிறார்.

அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் செல்லும் கேட் ரூபின்ஸ் ஆறு மாதங்கள் அங்கு தங்கி ஆய்வு நடத்த இருக்கிறார். இந்நிலையில், நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் விண்வெளியிலிருந்து வாக்களிக்கப் போவதாகக் கூறியுள்ளார் கேட் ரூபின்ஸ்.

தன்னால் விண்ணிலிருந்தாலும் வாக்களிக்க முடியும் என்பதால், மண்ணில் இருப்பவர்கள் கண்டிப்பாக வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ரூபின்ஸ், ஜனநாயகத்தில் பங்கேற்பது மிகவும் முக்கியமானது என கூறியுள்ளார்.

பெரும்பாலான அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஹூஸ்டனில் வசிப்பதால், பாதுகாப்பான மின்னணு வாக்குச்சீட்டை விண்வெளியிலிருந்து பயன்படுத்தி வாக்களிக்க டெக்ஸாஸ் சட்டம் அனுமதிக்கிறது. மிஷன் கன்ட்ரோல், வாக்குச்சீட்டை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வாக்குச்சீட்டை மீண்டும் கவுண்டி அதிகாரிகளிடம் கொண்டு சேர்ப்பது தான் இதன் நடைமுறை ஆகும்.

மற்ற செய்திகள்