பூமியை நெருங்கும் விண்கல்??.. ரெட் அலெர்ட் விட்ட நாசா.. பின்னணி என்ன??

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்த உலகம் முழுவதும் பல வியப்பு மற்றும் அபூர்வம் கலந்த விஷயம் நிறைந்து இருக்கும் நிலையில், அதே போல வான்வெளியிலும் பல அபூர்வங்கள் நிறைந்து தான் இருக்கிறது.

பூமியை நெருங்கும் விண்கல்??.. ரெட் அலெர்ட் விட்ட நாசா.. பின்னணி என்ன??

நட்சத்திரங்கள், கிரகங்கள், விண்வெளி, கேலக்ஸி என வான் உலகில் நிறைந்து நிற்கும் பல விஷயங்கள் தொடர்பாக அவ்வப்போது பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கூட, விண்வெளி நிலையங்கள் பலவும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, பல அரிய தகவல்களை தெரிவித்திருந்தது.

அதிலும் குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள விண்வெளி மையமான நாசா, ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்புள்ள கேலக்சி தொடர்பான அரிய  புகைப்படம் ஒன்றையும், அது மட்டுமில்லாமல் செவ்வாய் கிரகம் தொடங்கி பல கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் தொடர்பான வியக்க வைக்கும் தகவல்களை வெளியிட்டு, ஒட்டுமொத்த உலகிலுள்ள மக்களையும் ஆடி போக வைத்திருந்தது.

இந்நிலையில், தற்போது நாசா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி தொடர்பான தகவல், பலரது மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பூமியை சுற்றியுள்ள விண்கல்லின் செயல்பாடு சமீபத்தில் அதிகரித்துள்ளது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், தற்போது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஏறக்குறைய ஒரு பெரிய விமானத்தின் அளவில் உள்ள விண்கல் ஒன்று, பூமியை மிக அருகில் நெருங்கும் என எச்சரிக்கை கொடுத்துள்ளது.

NEO 2022 QP3 எனப்படும் இந்த விண்கல்லானது, இந்திய நேரப்படி இன்று (ஆகஸ்ட் 28) இரவு 9:55 மணியளவில் பூமியை கடந்து செல்லும் என்றும் நாசாவின் CNEOS தெரிவித்துள்ளது. இது நூறு அடி அகலம் கொண்ட ஒரு பெரிய விண்கல் ஆகும். மேலும் இது பூமிக்கு 5.51 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிற்கு நெருங்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விண்கல்லின் அளவு மற்றும் தொலைவை கருத்தில் கொண்டு, அமெரிக்க விண்வெளி ஏஜென்சியின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம், இந்த விண்கல்லுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்து, அதனை சாத்தியமான அபாயகரமான ஒரு பொருளாகவும் அறிவித்துள்ளது.

அது மட்டுமில்லாமல், பூமியை இந்த விண்கல் 7.23 கிலோமீட்டர் வேகத்தில் நெருங்கி வருவதாகவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

NASA, ASTEROIDS, EARTH

மற்ற செய்திகள்