'தமிழ் அரசியல் தலைவர்கள்.. சந்தர்ப்பவாத அரசியல், பகையை தூண்டுறத'.. தவிர வேற என்ன செஞ்சிருக்கீங்க?'.. நமல் ராஜபக்சே காட்டம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

தமிழகத்தின் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களைப் பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தும் இல்லை, அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் வகையில் எந்த ஒரு ஆக்கப் பூர்வமான செயற்பாடுகளை செய்ததும் இல்லை. மாறாக தங்களுடைய நட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவதுதான் மிகுந்த வேதனை தரும் உண்மை என்று மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

'தமிழ் அரசியல் தலைவர்கள்.. சந்தர்ப்பவாத அரசியல், பகையை தூண்டுறத'.. தவிர வேற என்ன செஞ்சிருக்கீங்க?'.. நமல் ராஜபக்சே காட்டம்!

இலங்கை முன்னாள் பிரதமர் பிரேமதாசாவின் மகனும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளருமான கோத்தபயே ராஜபக்சே தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளரான சஜித் பிரேமதாசாவை வீழ்த்தி அண்மையில் நிகழ்ந்துள்ள இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தனது அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில்,  ‘தமிழகத்தில் தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில் தமிழ் மக்களைப் பற்றி அக்கறை உள்ளவர்களாக காட்டிக் முதலைக்கண்ணீர் வடிக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கைகளை கண்ணுற்றேன். அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர அவற்றில் வேறு ஏதும் இல்லை. எமது மக்களை பகடைக்காய்களாக்கி மக்களிடையே பகையையும் துவேஷத்தையும் தூண்டிவிடும் மூன்றாந்தர அரசியலைத் தவிர வேறு என்ன ஆக்கப்பூர்வமான விடயத்தை செய்து இருக்கிறீர்கள் என்ற கேள்வி என்னுள் எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை’ என்றும் நமல் விமர்சித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள திருமாவளவன்,  ‘தமிழ் அரசியல்வாதிகளுக்கு நீங்கள் ஒன்றும் அறிவுரை சொல்ல தேவையில்லை.. இலங்கை சென்றபோது மஹிந்த ராஜபக்சேவிடம் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வலியுறுத்தியிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். 

NAMALRAJAPAKSA, SRILANKAPRESIDENTELECTION2019, GOTABAYA