"நான் உயிரோட தான் இருக்கேன்".. இறந்த கணவரை உணவகத்தில் பார்த்ததாக பெண் சொன்ன விவகாரத்தில் பரபரப்பு ட்விஸ்ட்..

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனில் உள்ள உணவகம் ஒன்று வெளியிட்ட வீடியோவில், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது கணவர் அதில் இருந்ததாக பெண் ஒருவர் குறிப்பிட்டிருந்த விஷயம், பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருந்தது.

"நான் உயிரோட தான் இருக்கேன்".. இறந்த கணவரை உணவகத்தில் பார்த்ததாக பெண் சொன்ன விவகாரத்தில் பரபரப்பு ட்விஸ்ட்..

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "IPL வரலாற்றுலேயே அவர் தான் பெஸ்ட் பிளேயர்".. கிரிக்கெட் ஜாம்பவான்கள் கைகாட்டிய வீரர்..!

West Sussex பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றின் விளம்பர வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. இது தொடர்பான வீடியோ வைரலான போது அதனை கவனித்த லூசி என்ற பெண், கடந்த 2014 ஆம் ஆண்டு உயிரிழந்த கணவர் ஹாரி அந்த வீடியோவில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனால், அந்த வீடியோ பழையதாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான் அது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இதனால், இது பெரிய அளவில் கேள்விகளையும், குழப்பங்களையும் உருவாக்கி இருந்தது.

Mystery of man who claimed by woman as her husband died before 9 years

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், லூசி கணவர் என குறிப்பிட்ட நபர் யார் என்பது பற்றிய உண்மையான காரணம் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, அந்த உணவகத்தின் உரிமையாளர், தனது கணவர் ஹாரி என லூசி குறிப்பிட்ட நபருடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அதன்படி, தனது கணவர் ஹாரி என லூசி குறிப்பிட்ட நபர் அவரது கணவர் இல்லை என்பதும், அந்த நபருடைய பெயர் ஆலன் ஹார்டிங் (Alan Harding) என்பதும் தெரிய வந்துள்ளது. ஆலன் இருக்கும் வீடியோவால், முன்பு இறந்த நபர் ஒருவர் இருக்கிறார் என்ற செய்தி பரவி வருவதாகவும் அதனால் பழைய வீடியோவாக இருக்கலாம் என்ற கருத்தும் பரவலாக இருந்து வருவதாகவும் ஆலனின் நண்பர் ஒருவர் அவரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆலன், அதில் இருப்பது தானும் தனது நண்பரும் தான் என்றும், சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான் அது என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் தான் உயிருடன் இருப்பதாகவும் ஆலன் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

Mystery of man who claimed by woman as her husband died before 9 years

Images are subject to © copyright to their respective owners.

இதனால், லூசியின் கணவர் அது இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த கணவர் வீடியோவில் இருந்ததாக பெண் உருவாக்கிய குழப்பத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | அடுத்த 300 வருஷத்துக்கு டேஞ்சர்.. காணாமல்போன கதிரியக்க கேப்ஸ்யூல்.. மொத்த படையையும் இறக்கிய நாடு.. திகிலூட்டும் பின்னணி..!

MAN, WOMAN, HUSBAND

மற்ற செய்திகள்