மனிதர்களுக்கு புதிய தலைவலி?.. பரவத் துவங்கிய 'ஜாம்பி' நோய்?... மருத்துவர்கள் சொல்லிய அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கனடாவில் மான்களுக்கு ஜாம்பி நோய் தாக்கி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இது மனிதர்களுக்கும் பரவலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது பலரையும் அதிரவைத்து உள்ளது.

மனிதர்களுக்கு புதிய தலைவலி?.. பரவத் துவங்கிய 'ஜாம்பி' நோய்?... மருத்துவர்கள் சொல்லிய அதிர்ச்சி தகவல்..!

ஜாம்பி நோய்

மான்களில் பரவிவரும் இந்த ஜாம்பி நோய் அவற்றின் உமிழ்நீர், சிறுநீர் ஆகியவற்றை தொடர்ந்து சுரக்க வைக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். Chronic Wasting Disease (CWD) என்று சொல்லப்படக்கூடிய இந்நோய், மூளையின் ப்ரியான் என்னும் புரத அமைப்பை பாதிக்கக்கூடியது. இதனை zombie deer disease என்றும் அழைக்கிறார்கள்.

இந்த நோயால் தாக்கப்படும் மான்களின் உடல்மொழியில் மாற்றம் ஏற்படும் எனவும் இதனால் மான்கள் மரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், கனடாவின் ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் போன்ற பகுதிகளில் உள்ள மான்களை இந்த நோய் பாதித்து வருகிறது. இதனால் பல மான்கள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மரை மான், கலை மான், சதுப்புநில மான், கட மான் போன்ற பல்வேறு வகையான மான்களையும் இந்த நோய் தாக்கலாம் என தெரிவித்திருக்கிறார்கள் உயிரியல் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவில்

தற்போது மான்களிடையே பரவிவரும் இந்த ஜாம்பி நோய் முதன் முறையாக 1960 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் கொலராடோ, ஓக்லஹோமா, கன்சாஸ், நெப்ராஸ்கா, மினசோட்டா, விஸ்கான்சின், தெற்கு டகோட்டா மற்றும் மொன்டானா ஆகிய இடங்களில் பரவியது. அதன் பிறகு 1996 ஆம் ஆண்டில் கனடாவின் சஸ்காட்செவன் பகுதியில் உள்ள மான் பண்ணைகளில் இந்த நோய் பரவியதாக கூறப்படுகிறது.

மனிதர்களை தாக்குமா?

இந்த நோய் இதுவரையில் மனிதர்களை தாக்கியதில்லை எனக்கூறும் ஆய்வாளர்கள் ஆனால் மனிதர்களை தாக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரித்து உள்ளனர். மான்களின் ரத்தம் மூலமாக மனிதர்களுக்கு பரவலாம் என்பதே ஆராய்ச்சியாளர்களின் வாதம்.

இருப்பினும் மான்களை வேட்டையாடுவது, நோயுற்ற மான்களை உணவாக உட்கொள்வது, மான்களின் தோல் பொருட்களை கையாள்வது ஆகியவற்றை தவிர்க்குமாறு மனிதர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் கிருமி தாக்குதல் மனித சமுதாயத்தை பாடாய்படுத்திவரும் நிலையில், தற்போது கனடாவில் ஜாம்பி நோய் அங்குள்ள மான்களுக்கு பரவி வருவதாக வெளியான செய்தி பலரையும் திடுக்கிட வைத்து உள்ளது.

ZOMBIE, DEERS, CANADA, ஜாம்பி, கனடா, மான்

மற்ற செய்திகள்