திடீர்னு பிங்க் கலர்ல மாறிய வானம்.. ஏலியன்களோட வேலைன்னு தெறிச்சு ஓடிய பொதுமக்கள்..லாஸ்ட்ல உண்மையை ஒத்துக்கொண்ட கம்பெனி..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரேலியாவில் திடீரென வானம் பிங்க் நிறத்தில் மாறியிருக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில் உண்மையான காரணத்தை உள்ளூர் நிறுவனம் ஒன்று தெரிவித்திருக்கிறது.
Also Read | "என் பொண்டாட்டிய என்கூட சேர்த்துவைங்க.. இல்லைன்னா".. மொபைல் டவர் மீது ஏறிய கணவன்.. பதறிப்போன கிராம மக்கள்..!
ஆஸ்திரேலியாவின் வடக்கு விக்டோரியாவில் உள்ள மில்துரா நகரம் கடந்த புதன்கிழமை வழக்கமான ஒரு நாளாகவே இருந்திருக்கிறது. ஆனால், அன்று மாலை அப்படி இருக்கவில்லை. இருள் சூழ துவங்கிய கொஞ்ச நேரத்தில் வானம் முழுவதும் பிங்க் நிறத்தில் மாறியிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வானத்தினை புகைப்படம் எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட கொஞ்ச நேரத்தில் இந்த புகைப்படங்கள் வைரலானது.
நெட்டிசன்கள் இது ஏலியன் வருவதற்கான அறிகுறி என்றும், விண்கல் விழப்போகிறது என்றும் கதைகளை கமெண்டாக போட்டுவிட அந்த நகரமே பரபரப்பாகியிருக்கிறது. இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கும் தகவல் கிடைக்கவே, இதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் அவர்களும் திகைத்திருக்கிறார்கள்.
உண்மையை சொன்ன நிறுவனம்
ஆஸ்திரேலியாவில் ஒரேயொரு நிறுவனம் மட்டும் கஞ்சா மூலமாக மருத்துவ பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அரசின் அனுமதியுடன் இந்த நிறுவனம் கஞ்சா செடிகளை வளர்த்து அதிலிருந்து மருத்துவ பொருட்களை பிரித்து ஆய்வு செய்துவருகிறது. பாதுகாப்பபு காரணம் கருதி இந்த நிறுவனம் எங்கு இருக்கிறது என்ற தகவல்கள் பரம ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இங்கே கஞ்சா செடிகளை வளர்க்க சிவப்பு நிற விளக்குகளை இரவு நேரத்தில் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அப்படி நேற்று விளக்குகள் ஆன் செய்யப்பட்டபோது, அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விளக்குகள் வானத்தை நோக்கி ஒளிர்ந்திருக்கின்றன. இந்த வெளிச்சம் மேகத்தில் பட்டு எதிரொலித்து பிங்க் நிறத்தில் காட்சியளித்திருக்கிறது.
கோளாறு
இந்நிலையில், இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் மூத்த தகவல் தொடர்பு மேலாளர் ரைஸ் கோஹன், "கஞ்சா செடிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு ஸ்பெக்ட்ரம் ஒளி பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் சிவப்பு ஒளி பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. நேற்று விளக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒளியானது வெளியே பரவியிருக்கிறது. விளக்கின் அதீத வெளிச்சம் காரணமாக வானத்தில் இந்த ஒளிக்கதிர்கள் பட்டு எதிரொளிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.
ஆஸ்திரேலியாவில் வானம் திடீரென வானம் பிங்க் நிறத்தில் மாறியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அங்குள்ள நிறுவனம் இதற்கு பொறுப்பேற்றுக்கொண்டது மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read | CBSE தேர்வு முடிவுகள்: எல்லா பாடத்துலயும் செண்டம்.. இந்தியாவை திரும்பி பார்க்க வச்ச 2 மாணவிகள்..!
மற்ற செய்திகள்