செவ்வாய் கிரகத்தில் உருவான வித்தியாசமான நில அமைப்பு.. ஏதும் சிக்னலா?.. ஆராய்ச்சியாளர்கள் சொல்லிய ஆச்சர்யமளிக்கும் உண்மை..!
முகப்பு > செய்திகள் > உலகம்செவ்வாய் கிரகத்தில் வித்தியாசமான நில அமைப்பு உருவாகியுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | நிலவுக்கு அனுப்பப்படும் நியூக்ளியர் ரியாக்டர்.. நாசா போட்ட ஸ்கெட்ச் இதுக்குத்தானா?
செவ்வாய் கிரகத்தின் கண்காணிப்பு ஆர்பிட்டரில் உள்ள ஹை-ரெசல்யூஷன் இமேஜிங் எக்ஸ்பெரிமென்ட் (HiRISE) கேமராவால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பல கோண வடிவில் இருக்கும் இவை எப்படி உருவானது? என்பது மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனிடையே இது ஏலியன்களின் வேலையாக இருக்குமோ? அல்லது அவர்கள் கொடுத்திருக்கும் சிக்னலா? என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிவந்தனர். இந்நிலையில் இந்த மர்ம முடிச்சை தற்போது அவிழ்த்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
வசந்த காலம்
செவ்வாய் கிரகத்தில் நான்கு பருவங்கள் உள்ளன. இது பூமியில் இருப்பதை விட இரண்டு மடங்கு நீளமானது. அங்கே வசந்த காலம் 190 நாட்களுக்கு மேல் நீடிக்கும். இந்த காலத்தில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு உயர் அட்சரேகைகளில் நீர் மற்றும் பனிக்கட்டிகள் ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் வலம் வரும் விண்கலத்தை நிர்வகிக்கும் அரிசோனா பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, செவ்வாய் கிரகத்தின் உயர் அட்ச ரேகைகளில் மண்ணில் பனிக்கட்டிகள் உறைந்து இருக்கின்றன. அவை வசந்த காலத்தில் விரிவடைந்து மண்ணின் மீது பிளவுகளை ஏற்படுத்துகின்றன. இதன் வழியே நீராவிகள் வெளியேறுகின்றன. இதன் காரணமாகவே இப்படி ஒரு நில அமைப்பு உருவாகிறது.
வித்தியாசமான அமைப்பு
காற்றின் திசை வேகத்தை பொருத்து இந்த நில அமைப்புகள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் உறைபனியில் உள்ள பொருட்களின் நிறம் காரணமாக இந்த அமைப்புகளும் வித்தியாசமான நிறங்களில் உருவாவதாகவும், இது செவ்வாய் கிரகத்தின் காலநிலையால் ஏற்படுவதுதான் எனவும் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஹை-ரெசல்யூஷன் இமேஜிங் எக்ஸ்பெரிமென்ட் (HiRISE) கேமரா இதுவரையில் பல்வேறு ஆச்சர்யம் அளிக்கும் புகைப் படங்களை எடுத்திருக்கிறது. அந்த வகையில் இந்த கேமராவால் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்