VIDEO: ‘வானில் திடீரென தோன்றிய கருவளையம்’.. ஏலியன் வருகையா? வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்வானில் திடீரென கருப்பு வளையம் ஒன்று தோன்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகர வான்பகுதியில் திடீரென கருப்பு வளையம் ஒன்று தோன்றியது. இதனை வீடியோ எடுத்து, வேற்று கிரக வாசிகளின் வருகை என்றும், பறக்கும் தட்டு என்றும் மக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் லாகூரில் இதுபோன்ற வான் வளையங்கள் தோன்றுவது புதிதில்லை எனக் கூறப்படுகிறது.
They are here. #Lahore #Aliens pic.twitter.com/OfWPG20Il9
— Blue on Blue (@razzblues) January 21, 2020
கடந்த 2015-ம் ஆண்டு கஸஜஸ்தான் நாட்டில் இதேபோல் வானில் கருப்பு வளையம் தோன்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த வளையம் வானில் 15 நிமிடங்கள் வரை நீடித்து மறைந்ததாக கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டு இங்கிலாந்திலும், 2013-ம் ஆண்டு அமெரிக்க நாட்டின் புளோரிடா மற்றும் 2012-ம் ஆண்டு சிகாகோ ஆகிய இடங்களிலும் இதுபோன்ற வளையங்கள் தோன்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கு முறையான அறிவியல் காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.