'டைனோசர்' மாதிரி இன்னொரு மிருகமா...? '99 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்திருக்கு...' - விஞ்ஞானிகள் கூறும் 'வியக்க' வைக்கும் தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மியான்மரில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள், ஒரு புதிய வகை பல்லியினமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மேலும், இவை ஒரு மிகச்சிறிய பறவை அல்லது டைனோசராக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, ஒகுலுடென்டாவிஸ் கவுங்ரே போன்ற இனத்தைச் சேர்ந்தவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

'டைனோசர்' மாதிரி இன்னொரு மிருகமா...? '99 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்திருக்கு...' - விஞ்ஞானிகள் கூறும் 'வியக்க' வைக்கும் தகவல்கள்...!

மேலும், புதிதாக கண்டறியப்பட்ட இந்த இரண்டு புதிய மாதிரிகளில், தாடை எலும்புகளுடன் இணைக்கப்பட்ட பற்கள் மற்றும் அம்பரில் பாதுகாக்கப்பட்ட மென்மையான திசுக்கள் மூலம் இதன் முக்கிய உடல் பண்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதன்காரணமாக அவை புதிய வகை பல்லி இனமாக இருக்கலாம் என்று அடையாளம் கண்டனர்.

இதுகுறித்து கூறிய ஸ்பெயினின் இன்ஸ்டிட்யூட் கேடலே டி பேலியோண்டோலோஜியா மைக்கேல் க்ரூசாஃபோன்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இந்த புதைப்படிவம் தொடக்கத்தில் ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. முதலில் இதனை பல்லி இனம் என்று நினைத்தோம். ஆனால் இது ஒரு பல்லி என்றால் இப்போது உள்ள இனங்களை அவை ஒத்திருக்கிவில்லை'

அதேபோல், 'இதன் பாலியான்டாலஜிஸ்டுகளை சி.டி ஸ்கேன் செய்து தரவுகளை ஆராய்ந்த போது, மர்ம விலங்கு செதில்களைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர். பற்கள் நேரடியாக தாடை எலும்புடன் இணைக்கப்பட்டிருந்தன. பொதுவாக டைனோசர்களின் பற்கள் ஒரு சாக்கெட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். தாடை எலும்புடன் அல்ல. எனவே இந்த புதைப்படிவங்கள் டைனோசர் இனத்தை முழுவதுமாக பிரதிபலிக்கவில்லை. அது மிகவும் அசாதாரணமானது' என ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மாதிரிகளும் வெவ்வேறு இனத்தை சார்ந்தவை. மேலும், இதன் கண் அமைப்பு மற்றும் பல்லிகளைப் போன்ற தோள்பட்டை எலும்புகள் மற்றும் ஹாக்கி குச்சி வடிவ மண்டை எலும்பு ஆகியவை தாடை எலும்புடன் இணைக்கப்பட்ட பற்களைக் கொண்ட ஊர்வன இனத்தோடு ஒத்துப்போவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இரண்டு மாதிரிகளை பாதுகாப்பாக எடுத்து வைக்கும் போது அவை சிதைய ஆரம்பித்தது என்பதையும் விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்தது.

மற்ற செய்திகள்