'UKவில் இருந்து யூடர்ன் அடித்த புதிய வகை கொரோனா வைரஸ்!'... கண்ணை மூடி திறப்பதற்குள் ‘இந்த நாடுகளிலும்’ நுழைந்து அட்டகாசம்!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் அதிவேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது Wales, Scotland, Denmark and Australia ஆகிய நாடுகளிலும் பரவி வருவதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
பிரிட்டன் சுகாதார செயலாளர் Matt Hancock இந்தியாவின் பல பகுதிகளில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதி வேகமாக அந்த கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் வெளியிட்ட தகவல்களால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அந்த புதிய வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமல்லாது வேல்ஸ், ஸ்காட்லாந்து, டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வேகமாக பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வேகமாக பரவிக் கொண்டிருக்கும் வைரஸை விட இந்த வைரஸ் இன்னும் வேகமாக பரவுவதால் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயினில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மூலம் இங்கிலாந்துக்கு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் வந்திருக்கலாம் என்று கருதப்படும் சூழ்நிலையில் இந்த புதிய வைரஸின் அமைப்பு சற்று வித்தியாசமாக இருப்பதால் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு, இந்த வைரஸை அடையாளம் காண்பது என்பது சற்று கடினமான விஷயம் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இந்த புதிய வகை வைரஸுக்கு எதிராக வேலை செய்யுமா என்பது தற்போது இருக்கிற கூடுதல் கவலை உண்டாகும் செய்தி என்று கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்