ட்விட்டர் டீலை நிரந்தரமாக கைவிட்ட எலான் மஸ்க்...ட்விட்டர் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை நிரந்தரமாக கைவிடுவதாக அறிவித்திருக்கிறார். இது உலக அளவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ட்விட்டர் டீலை நிரந்தரமாக கைவிட்ட எலான் மஸ்க்...ட்விட்டர் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு..!

Also Read | கொசு கடித்ததால் மரணித்த டிரெய்னி விமானியா..? உறவினர்களை சோகத்தில் ஆழ்த்திய அதிர்ச்சி சம்பவம்.!

எலான் மஸ்க்

அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் துடிப்புடன் இயங்கிவரும் இவர் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். அதன் பிறகு, நடைபெற்ற ட்விட்டர் நிர்வாக அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை அவர் மறுத்துவிட்டார்.

அதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்க தயார் என்றும் மொத்த விற்பனை தொகையையும் பணமாகவே அளிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்தார் மஸ்க்.

போலி கணக்குகள்

ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பணிகள் நடைபெறுவதாக சொல்லப்பட்டுவந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தினை வாங்கும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார் எலான் மஸ்க். மேலும், ட்விட்டர் தளத்தில் ஸ்பாம் மற்றும் போலி கணக்குகளின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Musk backs out of 44 billion Twitter deal over bot accounts

அதைத் தொடர்ந்து போலி கணக்குகளின் விபரங்களை ஒப்படைக்காவிட்டால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை முழுவதுமாக கைவிட இருப்பதாக சமீபத்தில் எலான் மஸ்க் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்வாங்கிய மஸ்க்

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தினை வாங்கும் ஒப்பந்தத்தை முழுவதுமாக கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார். இதன்மூலம், எலான் மஸ்க் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும், எலான் மஸ்க் இந்த டீலை நிறைவேற்றவில்லை எனில், 1 பில்லியன் அமெரிக்க டாலர் தொகை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | கணவர் இறந்துட்டாருன்னு போலீசுக்கு போன் செஞ்ச மனைவி.. எல்லாம் முடிஞ்ச அப்பறம் போனை செக் பண்ண போலீசுக்கு வந்த டவுட்.. வெளிவந்த பகீர் தகவல்..!

ELON MUSK, TWITTER, TWITTER DEAL, எலான் மஸ்க்

மற்ற செய்திகள்