வீடா இல்ல சொர்க்கமா..? மகனுக்காக அம்பானி வாங்கிய சொகுசு வில்லா.. உள்ள இவ்வளவு விஷயங்கள் இருக்கா?
முகப்பு > செய்திகள் > உலகம்உலக பணக்காரர்களில் ஒருவரும் இந்திய தொழிலதிபருமான முகேஷ் அம்பானி துபாயில் உள்ள சொகுசு வில்லா ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அந்த வில்லாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
Also Read | அடுத்த வாரம் கல்யாணம்.. அப்பாவுக்கும் மணமகளுக்கும் வந்த வாக்குவாதம்.. கோவத்துல தந்தை செஞ்ச பகீர் காரியம்..!
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக இருக்கிறார் முகேஷ் அம்பானி. உலக பணக்காரர்களின் வரிசையில் 11 வது இடத்தில் இருக்கும் அம்பானி சமீபத்தில் தனது நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளை தனது மகன் மற்றும் மகளுக்கு அளித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஆகாஷ் அம்பானிக்கு ஜியோ குழுமத்தின் சேர்மேன் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் துபாயில் சொகுசு வில்லா ஒன்றை வாங்கியிருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்திருந்தது.
சொகுசு வில்லா
துபாயில் உள்ள சொகுசு வில்லாக்களை வெளிநாட்டினருக்கு விற்கவும் ஆர்வம்காட்டி வந்தது துபாய் அரசு. அந்தவகையில் துபாயின் பாம் ஜூமெய்ராவில் உள்ள சொகுசு வில்லா ஒன்றை முகேஷ் அம்பானி வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 640 கோடி ரூபாய்) செலவழிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
கடற்கரையை பார்த்தபடி கட்டப்பட்டிருக்கும் இந்த வில்லா தீவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதனுள் பல ஆடம்பரமான வசதிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த மாளிகையில் மொத்தம் பத்து படுக்கையறைகள், ஒரு தனியார் ஸ்பா மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற நீச்சல் குளங்கள் உள்ளன. வில்லாவில் 70 மீட்டர் நீளமுள்ள தனியார் கடற்கரையும் உள்ளது. மேலும், இதனுள்ளே ஆடம்பர மதுக்கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ள சமையலறை சாப்பாட்டு பகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
ஆனந்த் அம்பானி
இந்த விலையுயர்ந்த வில்லாவை முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்திற்காக வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஸ்டாக் பூங்காவை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. இதன் மதிப்பு 79 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த பூங்காவின் உள்ளே ஜார்ஜியா காலத்து மாளிகை ஒன்று இருக்கிறது. இது அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்காக வாங்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், துபாயின் பாம் ஜூமெய்ராவில் உள்ள சொகுசு வில்லா ஒன்றை அம்பானி தனது மகன் ஆனந்திற்கு வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வில்லாவின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்