ஜப்பானின் ஃபுஜி மலையில் மலையேற்றத்தின்போது நேரலை (லைவ்) செய்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
ஜப்பானின் உயரமான ஃபுஜி மலையில் குளிர்காலத்தில் மலையேற்றம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தடையைப் பொருட்படுத்தாமல் டெட்ஜோ என்ற இளைஞர் அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளார். திங்கட்கிழமை மதியம் மலையேற்றத்தைத் தொடங்கியவர் அதை தனது செல்ஃபோன் மூலம் யூடியூபில் நேரலை செய்துள்ளார்.
தனது பயணத்தை நேரலையில் விவரித்துக்கொண்டே வந்த டெட்ஜோ, “நான் சரியான பாதையில் இறங்குகிறேனா? நான் வழுக்குகிறேன். இந்த செங்குத்தான பாதை மிகவும் ஆபத்தானது. வழுக்குகிறது” என்ற சத்தத்தோடு வீடியோவிலிருந்து மறைந்துள்ளார். பின்னர் அவருடைய சத்தம் மட்டுமே கேட்க, சிறிது நேரத்தில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்கிறது. இதை நேரலையில் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துபோய் உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து 10 பேர் கொண்ட மீட்புக்குழு டெட்ஜோவைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் தேடியும், அந்தப் பகுதியில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. பின்னர் டெட்ஜோவின் உடல் ஃபுஜி மலையின் ஷிஜுகோ பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அந்தத் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
キャプチャー動画あげときます
富士山滑落#ニコニコ動画 #ニコニコ生放送 #ニコ生 pic.twitter.com/0erDJ9vBFl
— いのうえ@卵とじ (@ponapona979) October 28, 2019