உயரம் கூடிய ‘எவரெஸ்ட்’ சிகரம்.. ஒரே நேரத்தில் அறிவித்த ‘இரு’ நாடுகள்.. புதிய உயரம் என்ன..?
முகப்பு > செய்திகள் > உலகம்எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அதிகரித்துள்ளதாக நேபாள அரசு கணக்கிட்டு அறிவித்துள்ளது.
நேபாளம்-சீனா எல்லையில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. சமீபத்தில் நேபாள அரசு எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை கணக்கிட்டு வெளியிட்டுள்ளது. அதன்படி சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்த அளவை ஒப்பிடுகையில் தற்போது 0.86 மீட்டர் உயர்ந்துள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறித்த அறிவிப்பை காத்மாண்டுவில் இருந்து நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலியும், பெய்ஜிங் நகரில் இருந்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யும் நேற்று ஒரே நேரத்தில் வெளியிட்டனர்.
இதுகுறித்து கூறிய பிரதீப் குமார் கியாவாலி, ‘எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டர். இது முந்தைய கணக்கீட்டை விட 86 செ.மீ. (கிட்டத்தட்ட 3 அடி) அதிகம்’ என அவர் கூறியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது. இதன்காரணமாகதான் மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் கணக்கிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்