'என் குழந்தையே வந்து முத்தம் கொடுத்தது போல இருந்துச்சு...' 'இது எனக்கு கடவுள் கொடுத்த ஆசீர்வாதம்...' நெகிழ்ச்சியான சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் அன்பினை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக தன் மகளை பறிகொடுத்த தந்தை டெலிவரி செய்யும் இடத்தில் குழந்தையை அன்புடன் அணைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரையும் கவர்ந்து வருகிறது.
லிண்ட்சே ஷீலி என்பவர் அமெரிக்காவின் ரோட் தீவில் கிரான்ஸ்டன் என்ற நகரத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ தான்,
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் - என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்றவாறு அன்பினை அடைத்து வைக்க முடியாத அமெரிக்க தந்தையின் செயல் இணையத்தை கலக்கி வருகிறது.
லிண்ட்சே ஒரு நாள் அவருடைய மகனுக்கு பிடித்த பீட்சா ஆர்டர் செய்துள்ளார். பீட்சா டெலிவரி செய்ய வந்த நபரை லிண்ட்சேவின் மகள் கோஹன் கட்டியணைத்து முத்தமிட சென்றுள்ளார். பதிலுக்கு அந்த நபரும் குழந்தையை அரவணைத்து கையசைத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் அவர்களுடைய வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோவை லிண்ட்சே அவருடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, இது மிகவும் அருமையான மற்றும் வேடிக்கையான தருணம் என்றும், இதை பார்க்கும் நீங்கள் சந்தோசம் அடைவீர்கள் என்று எழுதி டெலிவரி செய்ய வந்த நபரின் பெயரையும் குறிப்பிட்டுப் பகிர்ந்துள்ளார்.
டெலிவரி செய்ய வந்த ரியான் இந்த பதிவைப் பார்த்து அவருடைய வாழ்க்கையில் நடந்த சோகமான ஒரு நிகழ்ச்சியை அதில் குறிப்பிட்டுள்ளார்.
ரியான் கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் தன் மகளை இழந்துள்ளார் எனக் குறிப்பிட்டு, டெலிவரி செய்ய வந்த இடத்தில் குழந்தை என்னை அன்பாக வந்து அணைத்துக் கொண்டு முத்தமிட்டது என்னுடைய குழந்தையே வந்து தன்னை முத்தமிட்டது போல இருந்தது என்றும், இது கடவுள் தனக்கு கொடுத்த ஆசிர்வாதமாக நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
குழந்தை தீடிரென செய்த இந்த சம்பவம் உலகத்தில் இன்னமும் அன்புக்காக எங்கும் மனிதர்களும், அன்பு காட்டும் மனிதர்களும் இருக்கின்றனர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலர் பதிவு செய்து வருகின்றனர்.