'தனி' அறை, 'சூப்' மட்டுமே உணவு-பறிபோன உயிர்...5 வயது சிறுமியின் 'டைரி'யால் சிக்கிய தாய்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜப்பானைச் சேர்ந்த 5 வயது சிறுமியின் டைரியால்,அவரது தாய்-வளர்ப்புத்தந்தை இருவருக்குமே தண்டனை கிடைத்துள்ளது.

'தனி' அறை, 'சூப்' மட்டுமே உணவு-பறிபோன உயிர்...5 வயது சிறுமியின் 'டைரி'யால் சிக்கிய தாய்!

டோக்கியோவைச் சேர்ந்தவர் யுரி பனாடோ என்பவருக்கும் இவரின் முதல் கணவருக்கும் பிறந்த பெண் குழந்தை யுவா.கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்த பின்னர்,தனது குழந்தையை யுரியே வளர்த்து வந்துள்ளார். தொடர்ந்து யுரி 2-வது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.இதில் அவருக்கு ஒரு மகன் பிறந்துள்ளான்.மகன் பிறந்த பிறகு யுவாவை,யுரியும் அவரது 2-வது கணவர் யுடாயும் சேர்ந்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இருவரும் சேர்ந்து குழந்தையை ஒரு தனி ரூமில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். ஒரு நாளுக்கு இரண்டு வேளை சூப் மட்டுமே உணவாகக் கொடுத்து வந்துள்ளனர். 2 மாதங்களுக்கு மேலாகக் குழந்தை யுவா தனி அறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார். இதனால் 12 கிலோ எடை இருந்த யுவா உணவு சரியாக உண்ணாததால் நான்கு கிலோ எடை குறைந்து, எலும்பும் தோலுமாகக் காணப்பட்டுள்ளார்.தனிமை,மன அழுத்தம் எல்லாம் சேர்ந்து தாக்கியதில் யுவாவை நிமோனியா காய்ச்சல் தாக்கியுள்ளது.

ஆனால் பெற்றோர் இருவரும் அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை. தொடர்ந்து பிப்ரவரி மாத இறுதியில் யுவா இறந்து விட்டார்.இவர் எழுதிய டைரி ஒன்று அந்நாட்டு சமூக வலைதளங்களில் ரகசியமாக கசிந்துள்ளது.அதில்,''இனிமேல் நீங்கள் சொல்லாமலே என் வேலையை நானே செய்துகொள்கிறேன். நான் செய்த தவறுகளுக்கு அம்மாவும், அப்பாவும் என்னை மன்னிக்க வேண்டும்,''என யுவா உருக்கமாக எழுதியுள்ளார்.

அதன்பிறகே சிறுமி அனுபவித்த கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தொடர்ந்து அவரது தாய்க்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரித்த டோக்கியோ நீதிமன்றம் அவருக்கு எட்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கியுள்ளது.இந்த வழக்கு வரும் அக்டோபர் 1-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது யுரியின் இரண்டாவது கணவர் யுடாய்க்கு ஆயுள் தண்டனை வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பெற்ற தாயே குழந்தையை கொடுமைப்படுத்தி,அந்த குழந்தை இறக்கக் காரணமான சம்பவம் அந்நாட்டு மக்களை உலுக்கி எடுத்துள்ளது.தற்போது உயிரிழந்த யுவாவின் புகைப்படத்தை ஆங்காங்கே பொது இடங்களில் வைத்து, அந்நாட்டு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.யுவாவின் தாய்க்கு அளிக்கப்பட்ட தண்டனை ஜப்பான் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

MURDER, JAPAN