My India Party

'இந்த வருஷம் கூகுள்ல... அதிகம் தேடப்பட்டது இதெல்லாம் தான்!'.. அதிலும் அந்த 5வது இடம் தான் ஹைலைட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

2020ல் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது (Google Search) எது தெரியுமா? கண்டிப்பாக அது நாம் நினைக்கும் கொரோனா இல்லை.

'இந்த வருஷம் கூகுள்ல... அதிகம் தேடப்பட்டது இதெல்லாம் தான்!'.. அதிலும் அந்த 5வது இடம் தான் ஹைலைட்..!

ஒவ்வொரு வருடமும் கூகுள் 'தேடலில் ஆண்டு' அறிக்கை (The Annual Google 'Year in Search' Report) வெளியிடப்படும். இப்போது அந்த அறிக்கை வெளிவந்துள்ளது.  என்னதான் இதில் கொரோனா பற்றியும், கொரோனா தடுப்பு முறைகள் , தடுப்பூசி பற்றி பலரும் தேடியிருந்தாலும், ஆனால் அதை விடவும், IPL, 'எனக்கு அருகிலுள்ள உணவு முகாம்கள்' ('food shelters near me', 'எனக்கு அருகிலுள்ள பட்டாசு கடை' ('Cracker shop near me') என்பது ஆகியவை அதிகமாக தேடப்பட்டுள்ளன.

5வதாக அதிகம் தேடப்பட்டது 'குடி' மகன்களுக்கு மதுபானக் கடைகளுக்கான தேடல்கள் தான்.  இதே போல், இரவு தங்குமிடங்கள்' ('Night Shelters Near me')அதிகம் தேடப்பட்டுள்ளன.  தவிர, அமெரிக்கத் தேர்தல்' ('US Elections' ) குடியுரிமை திருத்தம் (Citizenship (Amendment) சட்டம், 'CAA'   பைடன் (Joe Biden),தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளரான அர்னப் கோஸ்வாமி (Arnab Goswami),வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் (North Korea chief Kim Jong-un), நெட்ஃபிக்ஸ் மனி ஹீஸ்ட் (Netflix's Money Heist),  சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை மற்றும் அவர் நடித்த திரைப்படமான தில் பச்சாரே (Dil Beparvah) ஆகியவை கூகுளில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்டவை.

மற்ற செய்திகள்