உலக வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு ஏலம் போன கார் இதுதான்.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட 1955 மெர்சிடிஸ் பென்ஸ் கார், ஏல வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு ஏலம்போன கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.

உலக வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு ஏலம் போன கார் இதுதான்.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா?

மெர்சிடிஸ் பென்ஸ்

ஜெர்மனி நாட்டை தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் மெர்சிடிஸ் பென்ஸ், உலகின் முன்னணி சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிலையில் இந்த நிறுவனம் தயாரித்த 1955 Mercedes-Benz 300 SLR Uhlenhaut Coupe மாடல் தான் தற்போது உலகில் அதிக விலைக்கு ஏலம் போன கார் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்த நிறுவனத்தின் ரேஸிங் கார்கள் தயாரிப்பு பிரிவு உருவாக்கிய 2 மாடல்களில் ஒன்று தான் தற்போது ஏலத்தில் சாதனை படைத்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் மூத்த டிசைனரான ருடால்ஃப் உலென்ஹாட் (Rudolf Uhlenhaut) என்பவரது பெயரையே இந்த காருக்கும் சூட்டியுள்ளது பென்ஸ் நிறுவனம்.

Most Expensive Car 1955 Mercedes Benz Sold For 143 Million USD

கண்காட்சி

மொத்தமே இந்த மாடலில் இரண்டு கார்களை மட்டுமே பென்ஸ் நிறுவனம் உருவாக்கியது. அதில் ஒன்றை அந்த நிறுவனமே ஸ்டட்கார்ட்டில் உள்ள Mercedes-Benz அருங்காட்சியகத்தில் வைத்திருக்கிறது. மற்றொரு கார் ஏலத்தில் விடப்பட இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால், உலக பணக்காரர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

ஏலம்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மே 5 ஆம் தேதி, இந்த அரிய காரை ஏலத்திற்கு கொண்டுவந்தது பிரபல ஏல நிறுவனமான RM சோதேபி. அழைப்பிதழ்கள் இருக்கும் பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த ஏலம் ஜெர்மனியில் உள்ள Mercedes-Benz அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தில் 143 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 1,108 கோடி ரூபாய்) இந்த கார் விற்பனையாகியுள்ளது.

Most Expensive Car 1955 Mercedes Benz Sold For 143 Million USD

முந்தைய சாதனை

இதற்கு முன்னதாக, 1962 Ferrari 250 GTO கார் கடந்த 2016 ஆம் ஆண்டு 48 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம்போனது. இதுவே இதுவரையில் சாதனையாக இருந்தது. இந்நிலையில் இந்த சாதனையைத்தான் தற்போது 1955 மெர்சிடிஸ் பென்ஸ் கார் முறியடித்துள்ளது. கடந்த சாதனையை விட, 3 மடங்கு அதிக விலைக்கு இந்த கார் விற்கப்பட்டது, ஆட்டோமொபைல் வரலாற்றில் மிக முக்கிய, மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்த காரை வாங்கிய நபரிடம், தொடர்ந்து இந்தக் காரை முக்கியமான கண்காட்சிகளில் பிரபலங்களின்  பார்வைக்கு வைக்க வேண்டும் என நிறுவனம் கோரிக்கை வைத்திருந்தது. அதனை ஏற்றுக்கொள்வதாக அவர் அறிவித்திருக்கிறார்.

Most Expensive Car 1955 Mercedes Benz Sold For 143 Million USD

மெர்சிடிஸ் பென்ஸ்-ன் 300 SLR Uhlenhaut Coupe மாடல் 143 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனையானது குறித்து உலகமே பரபரப்புடன் பேசிவருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

Nenjuku Needhi Home
EXPENSIVECAR, AUCTION, BENZ, மெர்சிடிஸ்பென்ஸ், கார், ஏலம்

மற்ற செய்திகள்