VIDEO: ‘16 வயசு கால்பந்தாட்ட வீரர்’... ‘கரெக்ட்டா’ கோல் அடிக்கப் போறப்பதான்... ‘கழுத்தை’ குறிவைத்து தாக்கியது அந்த மின்னல்! - அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யாவில் கால்பந்தாட்ட பயிற்சியின்போது 16 வயது வீரர் ஒருவருக்கு மின்னல் தாக்கிய வீடியோ காட்சி பார்ப்போரை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

VIDEO: ‘16 வயசு கால்பந்தாட்ட வீரர்’... ‘கரெக்ட்டா’ கோல் அடிக்கப் போறப்பதான்... ‘கழுத்தை’ குறிவைத்து தாக்கியது அந்த மின்னல்! - அதிர்ச்சி சம்பவம்!

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவின் அருகில் இருக்கும் நகரில் குறிப்பிட்ட கால்பந்தாட்ட கிளப் அணி வீரர்கள் வார இறுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு இருந்த கோல்கீப்பர் இவான் ஸபோர்ஸ்கி என்பவர் தன்னுடைய சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் மீது திடீரென்று மின்னல் தாக்கியதைடுத்து அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனை கண்ட பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக இவானின் பயிற்சியாளர், வாயுடன் வாய் வைத்து காற்றை செலுத்தி அவருக்கு முதலுதவி செய்தார்.

பின்னர் இவான் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவரை மின்னல் எப்படி தாக்கியது என்றே தெரியவில்லை. அதேசமயம் அவரது கழுத்தில் அணிந்திருந்த உலோகத்தால் அவரை மின்னல்

தாக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.இருப்பினும் அவர் கோமா நிலையில் இருப்பதாகவும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதை தவிர இவானின் காதலி அவருடனே இருக்கிறார். சுயநினைவு பெற்றாலும் அந்த அதிர்ச்சி காரணமாக இவான் மீண்டும் கோமா நிலைக்கு சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்