இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு...! ‘100 வருஷமா புன்னகைக்கிறார்...’ ‘சமூக வலைதளங்களில் பரவும் தவறான கருத்து...’ - வைரல் போட்டோ குறித்த உண்மை பின்னணி...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

100 வருடங்களுக்கு முன் இறந்த துறவியின் முகம் இன்றும் மலர்ந்த சிரிப்புடன் கூடிய புன்னகையுடன் காணப்படுவதாக சமூக வலைதளங்களில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு...! ‘100 வருஷமா புன்னகைக்கிறார்...’ ‘சமூக வலைதளங்களில் பரவும் தவறான கருத்து...’ - வைரல் போட்டோ குறித்த உண்மை பின்னணி...!

புகைப்படத்தில் இருக்கும் துறவி மங்கோலியா நாட்டை சேர்ந்தவர், இவர் இன்று வரை இறக்கவில்லை, மாறாக ஆழ்ந்த தியான நிலையில் உள்ளார் என வைரல் பதிவுகளில் கருத்து தெரிவிக்கின்றனர். இதே தகவல் அடங்கிய புகைப்படம் ட்விட்டரிலும் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

சமூக வலைதளங்களில் வலம் வரும் வைரல் துறவியின் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது 2018-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. உண்மையில் புகைப்படத்தில் இருப்பது லுயங் போர் பிளான் எனும் புத்த துறவி ஆவார். இவர் உடல்நலக் குறைவால் நவம்பர் 2017-இல் மரணித்துள்ளார். தாய்லாந்தின் பாங்காங் மருத்துவமனையில் இவரது உயிர் பிரிந்தது. பின் இரண்டு மாதங்களுக்கு பின் இவரது உடல் மீண்டும் எடுக்கப்பட்டு, புத்தாடைகள் அணிவிக்கப்பட்டன. இது புத்த மதத்தின் பாரம்பரிய வழக்கம் ஆகும். இது பற்றிய தகவல்கள் அடங்கிய செய்திகள் பல்வேறு வலைதளங்களில் தற்போது வெளியாகி இருக்கின்றன.

அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் இருக்கும் துறவி 100 ஆண்டுகளுக்கு முன் மரணிக்கவில்லை என்பதும், இவர் மங்கோலியாவில் மரணிக்கவில்லை என்பதும் உறுதியானது.

மற்ற செய்திகள்