VIDEO: Money Heist-ஐ மிஞ்சும் வங்கி கொள்ளை.. சாலை முழுவதும் ‘பணம்’.. கொத்துக் கொத்தாக அள்ளிய மக்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வங்கியில் கொள்ளையடித்த பணத்தை சாலையில் வீசிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIDEO: Money Heist-ஐ மிஞ்சும் வங்கி கொள்ளை.. சாலை முழுவதும் ‘பணம்’.. கொத்துக் கொத்தாக அள்ளிய மக்கள்..!

பிரேசில் நாட்டில் சான்டா கேட்டரினா என்ற இடத்தில் உள்ள 4 வங்கியில் 20-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு பணத்தை கொள்ளையடித்துள்ளனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர்.

அப்போது போலீசாருக்கும், கொள்ளையர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் இருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தப்பி செல்லும்போது கொள்ளையர்கள் பணத்தை சாலையில் வீசிச் சென்றுள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கொத்துக் கொத்தாக பணத்தை அள்ளி சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவத்தை அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் வீடியோ எடுத்து ‘Money Heist’ வெப் சீரிசை பார்ப்பதுபோல் உள்ளது என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்