‘காணாமல் போயிருந்த தாய், மகன்..’ வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது அதிர்ந்த போலீஸ்.. இன்னும் ‘உறையவைத்த’ பிரேத பரிசோதனை முடிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனில் 7 வயது சிறுவன் Timur மற்றும் அவனது தாய் Yulia Gokcedag (35) இருவரையும் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் தேடி வந்தனர்.

‘காணாமல் போயிருந்த தாய், மகன்..’ வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது அதிர்ந்த போலீஸ்.. இன்னும் ‘உறையவைத்த’ பிரேத பரிசோதனை முடிவு!

ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி அந்த சிறுவனும் அவனது தாயும் காணவில்லை என போலீசாரிடம் புகார் அளிக்கப் பட்டது. இதனையடுத்து போலீசார் இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர். கடைசியாக நேற்று மதியம் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டுக்கு வந்த போலீசார் வீட்டை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த போது அந்த அதிர்ச்சியளிக்கும் காட்சியை கண்டுள்ளனர்.

அங்கு Yulia Gokcedag தூக்கில் தொங்கிக் கொண்டிருக்க அவருக்கு அருகில் சிறுவன் இறந்து கிடந்துள்ளான்.  பின்னர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போதுதான் சிறுவன் தண்ணீரில் அமுக்கி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் Yulia Gokcedag எதற்காக தன் மகனை தண்ணீரில் அமுக்கிக் கொன்றார் என்பதற்கான காரணங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்