“45 நிமிஷம் அழுதேன்! என் தப்புதான்!”.. சிறார் இணையதளத்தில் இதயம் நொறுங்கும் காட்சி! அதிர்ந்து போன ‘பிஞ்சு’ குழந்தையின் அம்மா! பெற்றோர் உஷார்!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் தாயார் ஒருவர் தனது பிஞ்சு குழந்தையின் தகாத புகைப்படத்தை துஷ்பிரயோகம் செய்து, சிறார் துஷ்பிரயோக இணையதளத்தில் பதிவிடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
லிவர்பூல் மெர்செசைடைச் சேர்ந்த 29 வயது தாயார், தனது மகள் காலியா, 6 மாத குழந்தையாக இருக்கும்போது இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கி அதில் குழந்தை காலியாவின் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். ஆனால் குழந்தையின் புகைப்படங்களுக்கு பலர் கருத்து தெரிவிப்பதை, துவக்கத்தில் அவருக்கு மகிழ்ச்சியான நிகழ்வாக கருதியுள்ளார். ஆனால் ரஷ்யாவில் இருந்து இயங்கும் ஒரு சிலர் இணையதளத்தில் தனது குழந்தையின் புகைப்படங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு பதிவுசெய்திருப்பது கண்டு அமெண்டா அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அந்தப் புகைப்படத்திற்கு பதிவான கருத்துகள் இன்னும் இழிவாக இருந்துள்ளது கண்டு மேற்கொண்டு அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் துயரம் அடைந்திருக்கிறார்.
இது பற்றிப் பேசிய அவர், “சுமார் 45 நிமிடங்கள் அழுது தீர்த்தேன். என்னால் சரியாக தூங்க முடியவில்லை. இது மொத்தமும் எனது தவறு என்றே நான் கருதுகிறேன். நானே என் மகளுக்கு இந்த இழி நிலையை உண்டாக்கி விட்டேன்” என்று பேசியுள்ளார். தமது குழந்தையின் மொத்தம் 4 புகைப்படங்கள் அந்த இணையதளத்தில் இருந்ததாகவும் அதனால் அதை தாங்கிக் கொள்ள முடியாததாகவும் தெரிவித்த அவர் நம்மை அறியாமலும் அந்த புகைப்படங்களை பலர் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று அனைவருக்கும் எச்சரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சில பெற்றோருடன் இணைந்து அந்த ரஷ்ய இணைய தளத்தை முடக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அமெண்டா.
மற்ற செய்திகள்