Valimai BNS

எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் தஞ்சம் தர ரெடியா இருக்கோம்.. உக்ரைனுக்கு உதவி கரம் நீட்டிய நாடு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைனில் இருந்து எவ்வளவு மக்கள் வந்தாலும் அவர்களுக்கு தஞ்சம் தர தயார் என மால்டோவா நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார்.

எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் தஞ்சம் தர ரெடியா இருக்கோம்.. உக்ரைனுக்கு உதவி கரம் நீட்டிய நாடு..!

உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷ்ய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன.  இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் எல்லை பிரிவுகள், எல்லையில் ரோந்து பகுதிகள் மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் நடத்தப்படுகின்றன.

இந்த போரை முன்னிட்டு லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்ல உக்ரைன் அறிவுறுத்தியுள்ளது.  மக்களை லிசிசான்ஸ்க், ரூபிஜ்னே மற்றும் ஸ்வாடோவ் ரயில் நிலையங்களுக்கு செல்லும்படி கூறப்பட்டுள்ளது.  மெட்ரோ சுரங்க பாதையில் உக்ரைன் மக்கள் தங்களை தற்காத்து கொள்வதற்காக தஞ்சமடைந்துள்ளனர்.

கிளஸ்டர் பாம்ப் எனப்படும் கொத்து குண்டு வகை வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன.உக்ரைனில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து ரஷியா குண்டு வீசுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உக்ரைன் மக்கள் பீதியடைந்து உள்ளனர். பலர் தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

Moldova ready to receive Ukrainian refugees

இந்த நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டோவா நாட்டின் அதிபர் மைய சண்டு, உக்ரைன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என்று  மால்டோவாவின் அதிபர் அறிவித்துள்ளார். மேலும், உக்ரைனில் இருந்து எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார். அதிபரின் இந்த அறிவிப்பால் உக்ரைன் எல்லையோர மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.

MOLDOVA, UKRAINIAN

மற்ற செய்திகள்