உறைந்து போன நகரம்.. 5 நிமிஷம் வெளியே போனாலும் ரிஸ்க்.. வரலாற்றுல இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லயா ?
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் வடக்கு பகுதியில் வெப்பநிலை கடுமையாக குறைந்துள்ளது. இதனால் ஆராய்ச்சியாளர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read | 101 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு.. 5 வகை உணவு, சீர்வரிசைகள் என நெகிழ வைத்த மருத்துவ கல்லூரி..!
சீனாவின் வட மாகாணமான Heilongjiang-ல் அமைந்து உள்ளது மோஹி நகரம். கிட்டத்தட்ட ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள அந்த நகரம் தற்போது முழுமையாக பனியின் பிடியில் இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இப்பகுதியின் வெப்பநிலை -53 டிகிரியாக பதிவாகியுள்ளது. இது இந்த வருடத்தில் பதிவான மிகவும் குறைவான வெப்பநிலை என அந்நாட்டு வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.
இந்த பகுதியில் கடந்த 1969 ஆம் ஆண்டு -52.3C வெப்பநிலை பதிவாகி இருந்தது. இதுவே மிகக்குறைந்த வெப்பநிலையாக இருந்தது. இந்நிலையில் தற்போது -53 டிகிரி பாதிவாகி இருப்பது அந்நகர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும். சீனா என எடுத்துக்கொண்டால் கடந்த 2009 ஆம் ஆண்டு Genhe மாகாணத்தில் -58 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதுவே அந்நாட்டின் மிகக்குறைந்த வெப்பநிலை ஆகும்.
Image Credit : CNN
ரஷ்ய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மோஹே, சீனாவின் "வட துருவம்" என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கே ஜனவரி மாதத்தில் வெப்பநிலை உறைபனிக்கு அருகில் அல்லது அதற்குக் கீழே இருக்கும். மோஹியில் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் குளிர்காலம் நீடிக்கும். சீனாவில் கடந்த ஆண்டு கடுமையான வெப்ப அலை வீசியது. இதனையடுத்து பல பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது வெப்பநிலை மிகவும் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Image Credit : CNN
இந்த வெப்பநிலை குறைவு frostbite அல்லது ஹைப்போதெர்மியா எனும் பிரச்சனையை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உறைபனி அல்லது -20 டிகிரி வரையில் சிக்கல் பெரிதாக இருக்காது எனச் சொல்லும் மருத்துவர்கள் அதற்கு கீழே வெப்பநிலை குறையும்பட்சத்தில் அது frostbite சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர். வெளியே 2-5 நிமிடங்கள் நேரம் செலவிட்டாலே பொதுமக்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெப்பநிலை குறைவால் வானிலை ஆய்வு மையம் 'ப்ளூ அலெர்ட்' எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | 'வாத்தி' விக்ரமன் மற்றும் ஷிவினின் உதவி.. 'வயிறார' வாழ்த்திய குழந்தைகள்.. நெகிழ வைக்கும் வீடியோ..!
மற்ற செய்திகள்