‘100% பலனளிக்கும் கொரோனா தடுப்பூசி’... ‘அவசர பயன்பாட்டிற்கு அனுமதியுங்க’... ‘கொரோனா மருந்து தயாரிப்பு நிறுவனம்’... ‘அளித்த முக்கிய தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் மாடர்னா கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் உலகமே முடங்கி கிடக்கிறது. உலகம் முழுவதும் 6 கோடி பேருக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்துள்ளனர். 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவை தடுக்க, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் இறங்கியுள்ளன. அது போல் அமெரிக்காவில் மாடர்னா எனும் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.
இந்த நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை 30 ஆயிரம் பேருக்கு சோதனை ஓட்டமாக செலுத்தப்பட்டது. இதில் 100 சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசர பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்க கோரி அமெரிக்க மருந்து பாதுகாப்பு நிறுவனத்தில் மாடர்னா விண்ணப்பித்துள்ளது.
ஒரு வேளை மாடர்னா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் 20 மில்லியன் மருந்துகள் தயாரிக்கப்படும். ஒருவருக்கு இரு டோஸ்கள் தேவைப்படுகிறது. ஆகவே இந்த நிறுவனம் தயாரிக்கும் மருந்து 10 மில்லியன் பேருக்கு சரியாக இருக்கும். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஃபைசர் மற்றும் பயோ என்டெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்து 90 சதவீதம் அளவிற்கு கொரோனா தொற்றிலிருந்து காக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 20-ம் தேதி, தடுப்பூசிக்கு உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பிறகு மாடர்னா நிறுவனம் தங்களது மருந்துகள் 95 சதவீதம் பலனை தருவதாக மாடர்னா கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது மாடர்னாவின் தடுப்பு மருந்து 100 சதவீதம் பலனளிப்பதாக ஆய்வுகளில் தெரியவந்தது. மாடர்னா தடுப்பு மருந்தை 6 மாத காலத்திற்கு 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைக்கலாம். இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸை போன்ற ஒரு வைரஸை உடலில் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு நாளைக்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர். இதனால் ஒப்புதல் அளித்தவுடன் அமெரிக்காவில் டிசம்பர் மாதமே பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்