'100 சதவிகித பலன் கொடுக்கும் மாடர்னா தடுப்பூசி'... 'எப்போது பயன்பாட்டுக்கு அனுமதி???'... 'அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள சிஇஓ!!!'...
முகப்பு > செய்திகள் > உலகம்மாடர்னா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவீதம் பலன் அளிப்பதாக 3ஆம் கட்ட பரிசோதனையில் தெரியவந்த நிலையில், இறுதி கட்ட ஆய்வின் அடிப்படையில் மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் செயல்திறனை கொண்டுள்ளதாக அந்நிறுவனம் முன்னதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அவசர கால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்துக்காக விண்ணபிக்க உள்ளதாக மாடர்னா நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது மாடர்னா தடுப்பூசியின் பயன்பாட்டிற்கு டிசம்பர் 17ஆம் தேதிக்கு பிறகு அமெரிக்கா அனுமதி வழங்குனமென அந்நிறுவனத்தின் சிஇஓ ஸ்டீபன் பான்செல் தெரிவித்துள்ளார். எப்டிஏ எனப்படும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் மாடர்னா அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி கோரியுள்ளது. இதையடுத்து வரும் டிசம்பர் 17ஆம் தேதி எப்டிஏவின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டம் நிறைவடைந்த 72 மணி நேரத்திற்குள் மாடர்னா தடுப்பூசி பயன்பாட்டிற்கு அனுமதி கிடைக்குமென ஸ்டீபன் பான்செல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்