'தடுப்பு' மருந்து சோதனையின் முதற்கட்ட ஆய்விலேயே,,.. கிடைத்த சிறப்பான 'குட் நியூஸ்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா தொற்று காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் கடும் சிக்கலில் தவித்து வரும் நிலையில், அந்த கொடிய தொற்றை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக உள்ளது.

'தடுப்பு' மருந்து சோதனையின் முதற்கட்ட ஆய்விலேயே,,.. கிடைத்த சிறப்பான 'குட் நியூஸ்'!!!

இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் உருவாக்கி வரும் தடுப்பு மருந்து, பல்வேறு சோதனை கட்டங்களில் நல்ல முடிவை தந்து வரும் நிலையில், தொடர்ந்து அடுத்தகட்ட சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அமெரிக்காவிலுள்ள மாடர்னா நிறுவனம் உருவாகியுள்ள கொரோனா தடுப்பூசி, வயதானவர்களிடமும் வைரசை அழிக்கக் கூடிய ஆன்டி பயாடிக்களை அதிகம் உற்பத்தி செய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

மாடர்னா தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை முதலில் 18 முதல் 55 வயது வரை உள்ளவர்களிடமும், அதனைத் தொடர்ந்து 56 முதல் 71 வயது வரை உள்ள நபர்களிடமும், அதற்கு அடுத்தபடியாக அதிகமான வயது உள்ளவர்களிடமும் நடத்தப்பட்ட சோதனையில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளது.

அதே சமயம், புளூ காய்ச்சலுக்கு போடப்படும் வீரியமிக்க தடுப்பு மருந்து மூலம் ஏற்படும் பக்கவிளைவுகள் இந்த தடுப்பு மருந்தின் மூலமும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்தகட்ட சோதனைகளில் இந்த தடுப்பு மருந்து சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்