'என் ஆடை, என் உரிமை...' 'இது 1921 இல்ல, 2021...' என்ன நடந்தது...? - கடுப்புல கொந்தளித்த மாடல்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இன்ஸ்டாகிராம் மாடல் அழகியான இசபெல்லா எலினோர் ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். விமானத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றால் உடலை மறைக்க வேறொரு ஆடை அணியும்படி விமான உதவியாளர்கள் தெரிவித்தனர்.

'என் ஆடை, என் உரிமை...' 'இது 1921 இல்ல, 2021...' என்ன நடந்தது...? - கடுப்புல கொந்தளித்த மாடல்...!

இசபெல்லா எலினோர் ஆஸ்திரேலியா கோல்ட் கோஸ்டிலிருந்து, மெல்போர்னுக்கு ஜெட்ஸ்டார் விமானத்தில் பயணம் செய்ய முனைந்த போது, அவரது ஆடை விமானத்தில் பயணம் செய்ய பொருத்தமானது அல்ல என்று விமான உதவியாளர் கூறியுள்ளார். அவர் ஒரு ஹை-வெஸ்ட் ஜீன்ஸும், க்ராப் டாப்பும் அணிந்திருந்தார். ஜெட்ஸ்டாரின் இந்த செயல் ‘என்னிடம் பாரபட்சமான நடந்து கொண்டது ஆகும்’ என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி 01-ம் தேதி திங்கட்கிழமை நடந்த சம்பவம் குறித்து, ஒரு வீடியோவை இசபெல் பகிர்ந்துள்ளதாக பிரபல ஆங்கில மீடியா தெரிவித்துள்ளது. தனது ஆடையை பிகினி எனக் குறிப்பிட்டு, அதை அணிந்து விமானத்தில் செல்ல முடியாது என, விமான பணிப்பெண் தன்னிடம் கூறியதாக இசபெல்லா குறிப்பிட்டுள்ளார்.

மாடல் ஜீன்ஸும் க்ராப் டாப்பும் அணிந்திருந்த போது, விமான ஊழியர்கள் தன்னை வெறுப்புடன் பார்த்ததாகவும், விமானத்தில் ஏற செக்-இன் செய்தபோது சக பயணிகள் யாரும் எதுவும் சொல்லவில்லை எனவும் இசபெல்லா தெரிவித்திருக்கிறார்.

ஜெட்ஸ்டாரின் நடத்தைக்கு ஆத்திரமடைந்த இசபெல்லா விமானத்திலிருந்து ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் தனக்கு நேர்ந்த இந்த விஷயத்தை அவமானமாக உணர்வதாக விவரித்தார். இது 2021 என்றும், 1921 இல்லை என்றும் குறிப்பிட்ட அவர், தான் விரும்பியதை அணிய தனக்கு உரிமையுண்டு என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஜெட்ஸ்டார் செய்தித் தொடர்பாளரிடம், விமானத்தில் நடந்த சம்பவத்திற்காக, இசபெல்லாவிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.

 

மற்ற செய்திகள்